டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பொதுத்தேர்தல்களில் வாக்களிப்பதை கட்டாயமாக்க கோரிய வழக்கு.. தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்

Google Oneindia Tamil News

டெல்லி: தேர்தலில் அனைவரையும் கட்டாயம் வாக்களிக்க உத்தரவிட வேண்டும் என கோரிய பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது

இந்தியாவில் நடைபெறும் பொதுத்தேர்தல்களில் நாட்டு மக்கள் அனைவரும் வாக்கப்பளிப்பதை கட்டாயமாக்க கோரி வழக்கு தொடரப்பட்டது நாடு முழுவதும் உள்ள அனைத்து வாக்காளர்களும் தேர்தலில் தவறாமல் கட்டாயம் வாக்களிக்கச் செய்யும் நடைமுறையை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது

Case for compulsory voting in general elections .. Supreme Court dismissed

இந்த வழக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் தொடரப்பட்டது இந்த பொதுநல மனுவிற்கு மத்திய அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது கடந்த 4 ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது இந்த வழக்கு இந்நிலையில் வழக்கை விசாரித்தது உச்சநீதிமன்றம்

அப்போது வாதிட்ட மத்திய அரசு அனைவரும் வாக்களிப்பதை கட்டாயமாக்குவது பற்றி தேர்தல் ஆணையத்திடம் தான் முறையிட வேண்டும் என்றது. இந்த வாதத்தை ஏற்ற உச்சநீதிமன்றம் பொதுநல மனுவை தள்ளுபடி செய்தது.

தமிழகத்தில் உயருகிறது பால் விலை? ஆவின் பால் விலையை உயர்த்த தமிழக அரசு திட்டம்தமிழகத்தில் உயருகிறது பால் விலை? ஆவின் பால் விலையை உயர்த்த தமிழக அரசு திட்டம்

அனைவரும் வாக்களிக்க உத்தரவிட வேண்டும் என கோரிய மனுவை உச்சநீதிமன்ற நீதிபதி கே.கே. வேணுகோபால் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் மேலும் இதுதொடர்பாக மனுதாரர் மத்திய தேர்தல் ஆணையத்தை அணுகி நடவடிக்கை எடுக்க வலியுறுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்

இதனிடையே மேற்கண்ட பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதற்கு மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள பலர் தேர்தலில் வாக்களிப்பது ஜனநாயக உரிமை.

எனினும் பல்வேறு சூழல் காரணமாக பெரும்பான்மையான மக்கள் சொந்த ஊர்களை விட்டு வெளிமாநிலம் அல்லது வெளியூர்களில் வசித்து வருகின்றனர். மேலும் வாக்காளர்கள் வாக்களிக்க போதுமான வசதிகளை தேர்தல் ஆணையம் செய்து தருவதில்லை.

வாக்களிக்க பல நூறு கிலோ மீட்டர் பயணம் செய்ய வேண்டிய சூழல் உள்ளது. எந்த தொகுதி ஓட்டையும் எங்கிருந்தும் செலுத்தலாம் என்பது போன்ற பல வசதிகள் செய்து தரப்பட்டால் மட்டுமே கட்டாய சட்டம் இயற்றுவது பற்றி சிந்திக்க முடியும் என கருத்து தெரிவித்துள்ளனர்.

English summary
Supreme Court dismisses welfare petition demanding mandatory voting
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X