வீட்டு பாடம் எழுதாத 5 வயது மகளை கை, கால்களை கட்டி கொளுத்தும் வெயிலில் நிற்க வைத்த கொடூர தாய்
டெல்லி: டெல்லியில் 5 வயது சிறுமியின் கை, கால்களை கயிற்றில் சுற்றி மொட்டை மாடியில் கொளுத்தும் வெயிலில் விட்டுச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் கராவல் துக்மீர்பூர் நகரில் வசித்து வருபவர் ராஜ்குமார் மற்றும் சப்னா. இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகனும் 5 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் வீட்டு பாடம் செய்யவில்லை என்பதால் 1ஆம் வகுப்பு படிக்கும் 5 வயது மகளை அடித்தார்.
மேலும் அந்த சிறிய குழந்தையை மொட்டை மாடிக்கு இழுத்து சென்று கை, கால்களை கயிறு போட்டு இறுக கட்டி உச்சி வெயிலில் அந்த குழந்தையை விட்டுவிட்டார்.

வெயில் அதிகம்
வெயில் அதிகரித்ததால் அந்த சிறுமி சுருண்டு படுத்துள்ளார். நேரம் ஆக ஆக சிறுமியால் வெப்பத்தை தாள முடியாததால் அவர் அழுதுள்ளார். இதனால் சப்தம் கேட்டு பக்கத்தில் இருந்த சிறுமியின் மாமா சுனில் உள்ளிட்ட உறவினர்கள் ஓடி சென்று சிறுமியின் கட்டுகளை அவிழ்த்து அவரை கீழ் கொண்டு வந்தனர்.

குழந்தைகளின் மாமா
இதுகுறித்து சுனில் கூறுகையில் ஒவ்வொரு முறையும் சிறிய பிரச்சினைகளுக்குக் கூட இரு குழந்தைகளையும் கண்மூடித்தனமாக தாக்கும் குணம் கொண்டவர் அந்த தாய். பொதுவாகவே சப்னா கோபக்கார பெண். அவர் அடிக்கும் போது நாங்கள் யாராவது தடுத்தால் கூட அந்த குழந்தைகள் மீது அதிக அடி விழும்.

என் குழந்தை
மேலும் "இது என் குழந்தை, அதை அடிக்க எனக்கு உரிமை இருக்கிறது" என அந்த தாய் கூறிவிடுவார். இதற்கு முன்னர் இப்படி நடந்ததில்லை. கடந்த 2, 3, ஆண்டுகளாகத்தான் இப்படி நடந்து கொள்கிறார். மேலும் குடும்ப உறுப்பினர்களுடன் எப்போதும் சண்டை போடுவதை வழக்கமாக கொண்டிருந்தவர்.

கோபம் வந்தால் போச்சு
மகளிடம் மட்டும் அல்ல, மகனையும் கோபம் வந்தால் கடுமையாக அடிப்பவர் சப்னா. கேட்டால் அடி அதிகம் விழும் என்பதால் குழந்தைகளுக்காக அவரை நாங்கள் எதுவும் கேட்காமல் விட்டு விடுவோம் என கூறியுள்ளார். இதே போன்று பக்கத்து வீட்டில் வசிக்கும் பிரதீப் என்பவர் கூறும் போது குழந்தைகளின் அழுகை சப்தம் எப்போதும் வீட்டில் இருக்கும்.

தாய் மீது வழக்கு பதிவு
குளிர் காலத்தில் கூட அவர்களது ஆடையை கழற்றி கடுங்குளிரில் நிற்க வைத்த சம்பவமும் நடந்துள்ளது. இதன் பின்னர் பக்கத்தில் வசிப்பவர்கள் குழந்தைகளுக்கு ஆடைகளை கொடுத்தனர். இதற்காக அவர்களிடமும் சப்னா மல்லுக்கு நின்றார் என்றார். இது தொடர்பாக தாய் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-
பூட்டிய வீட்டில்.. பேராசிரியர் இருந்த கோலம்! 1400 கி.மீ டிராவல் செய்து வந்து சம்பவம் செய்த தம்பதி! -
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
கொடூரம்.. பெரம்பூர் ஸ்டேஷனில் சூட்கேஸில் இருந்த உடல்.. தலையை செங்கல்பட்டு ஏரியில் மீட்ட போலீசார்! -
சிதம்பரத்தில் ஷாக்! உல்லாசத்திற்கு வர மறுத்த இளம்பெண்ணை கொன்ற முதியவர் கைது! -
வாத்தி கம்மிங்.. மீண்டும் டெல்லிக்கு பறக்கும் விஜய்! ’மேலிட’ தலைவர்களை சந்திக்க வாய்ப்பு! பரபர களம்! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்!












Click it and Unblock the Notifications