2027 மார்ச் 1 முதல்.. தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடக்கம்.. கூடவே ஜாதிவாரி கணக்கெடுப்பும்
டெல்லி: தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு வரும் 2027 மார்ச் 1 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதி வாரி கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. 2011 ஆம் ஆண்டு கடைசியாக நடைபெற்ற நிலையில், 16 ஆண்டுகளுக்கு பிறகு 2027-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்க உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்தியாவில் பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். கடைசியாக கடந்த 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன்படி, 2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு இருக்க வேண்டும்.

மக்கள்தொகை கணக்கெடுப்பு
ஆனால் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவது தள்ளிப்போனது. மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது நடத்தப்படும் என்ற கேள்விகளை எதிர்க்கட்சிகளும் முன்வைத்த நிலையில், கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதி வாரி கணக்கெடுப்பும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வந்தன. சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசு தாமதப்படுத்தி வந்ததால் பீகார், கர்நாடகா, தெலுங்கானா போன்ற மாநிலங்கள் தனித்தனியாக இந்த நடைமுறையை தொடங்கின.
சாதிவாரி கணக்கெடுப்பு
இதில் பீகார் அரசு கடந்த 2023 ஆம் ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி விவரங்களை வெளியிட்டது. அத்துடன் அதன் அடிப்படையில் இடஒதுக்கீட்டையும் வரையறுத்தது. ஆனால் இந்த இடஒதுக்கீட்டை பாட்னா உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. சாதி உள்ளிட்ட முழு தகவல்கள் அடங்கிய மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசுக்கே உரிமை இருப்பதாக அறிவித்தது.
இத்தகைய சூழலில்தான் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதி வாரி கணக்கெடுப்பும் நடத்த கேபினட் ஒப்புதல் அளித்தது. மத்திய அரசு அறிவித்த மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது நடைபெறும் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில்தான், மக்கள் தொகை கணக்கெடுப்பு வரும் 2027 ஆம் ஆண்டு மார்ச் 1 நடைபெறும் என்று மத்திய அரசு வட்டார தகவல்கள் கூறுகின்றன.
ஜூன் 16 ஆம் தேதி வெளியாகும்
மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கும் தேதியை மத்திய உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2026 அக்டோபர் 1 ஆம் தேதி காஷ்மீர், லடாக், உத்தரகாண்ட் மாநிலங்களில் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கும். இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027, மார்ச் 1 ஆம் தேதி இதர மாநிலங்களில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் முறையில் நடைபெற உள்ள இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் முடிவதற்கு 3 ஆண்டுகள் ஆகலாம் என்று அதிகாரிகள் மத்தியில் சொல்லப்படுகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் ஜூன் 16 ஆம் தேதி வெளியாகும்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications