"இதுவொரு நெருக்கடி நிலை.. உடனடியாக நடவடிக்கை எடுங்கள்..' மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
டெல்லி: டெல்லி காற்று மாசு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில் காற்று மாசுக்கு விவசாய கழிவுகளை எரிப்பது 10% மட்டுமே காரணம் என மத்திய அரசு தெரிவித்தது. ஆனால், மத்திய அரசு பொய் கூறி, உச்ச நீதிமன்றத்தைத் தவறாக வழிநடத்துவதாக ஆம் ஆத்மி சாடியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே தலைநகர் டெல்லியில் காற்று மாசு மிக மோசமான பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. காற்றை மாசை கட்டுப்படுத்த டெல்லி அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கும் இதுவரை பெரியளவில் பலன் இல்லை.
பஞ்சாப், ஹரியானா போன்ற அண்டை மாநிலங்களில் விவசாய கழிவுகள் எரிக்கப்படுவதே டெல்லியில் ஏற்படும் காற்று மாசுக்கு முக்கிய காரணம் எனக் கூறப்பட்டு வந்தது.

வெறும் 10% தான்
இந்நிலையில், டெல்லி காற்று மாசு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா, விவசாய கழிவுகளை எரிப்பது டெல்லியில் வெறும் 10% காற்று மாசுக்கு மட்டுமே காரணமாக உள்ளதாகத் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி சூர்ய காந்த், விவசாய கழிவுகளை எரிப்பது காற்று மாசுக்கு முக்கிய காரணம் இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா எனக் கேள்வி எழுப்பினார். இதை மத்திய அரசு வழக்கறிஞரும் ஒப்புக்கொண்டார்.

டெல்லி காற்று மாசு
டெல்லியில் பி.எம்.2.5 துகள்களால் ஏற்படும் காற்று மாசில் குளிர் காலத்தில் 4 சதவீதமும் கோடையில் 7 சதவீதம் மட்டுமே விவசாய கழிவுகளை எரிப்பதால் ஏற்படுகிறது என அறிவியல் ஆய்வுகள் கூறுவதாக மத்திய அரசு தனது பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளது. PM 2.5 என்பது 2.5 மைக்ரோமீட்டருக்கும் குறைவாகச் சுற்றுப்புறத்தில் உள்ள மாசு துகள்கள் ஆகும்.

நீதிபதிகள் சாடல்
இதைக் கேட்டு அதிருப்தி அடைந்த நீதிபதி டிஒய் சந்திரசூட், 'இப்போது பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. விவசாய கழிவுகளை எரிப்பது காற்று மாசுக்கு வெறும் 4% மட்டுமே காரணம். இதையெல்லாம் ஒரு காரணமாகவே கூற முடியாது' என்று குறிப்பிட்டார். தலைநகர் டெல்லியில் தற்போது நிலவும் காற்று மாசை நெருக்கடியான நிலை என்று கூறிய நீதிபதிகள் டெல்லி அரசு நொண்டி சாக்குகளைச் சொல்லியும் பொறுப்புகளைத் தட்டிக்கழித்தும் வருவதாகச் சாடினர்.

நடவடிக்கை எடுங்கள்
இது குறித்து நீதிபதிகள் கூறுகையில், "டெல்லியில் காற்று மாசு மிக மோசமான நிலையை அடையத் தொழிற்சாலைகளும், போக்குவரத்தும் தான் காரணம். இதற்கு விவசாய கழிவுகளை எரிப்பது முக்கியக் காரணம் இல்லை என்றாலும்கூட பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் அதிக அளவில் விவசாய கழிவுகள் எரிக்கப்படுகின்றன. விவசாயிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்க சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் ஒரு வாரத்தில் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீதிமன்றம் உத்தரவு
டெல்லியில் தற்போது நிலைமை மிக மோசமாக உள்ளதால் இங்குள்ளவர்கள் வீடுகளில் இருந்து பணிபுரிய அனுமதி அளிப்பது தொடர்பாக மத்திய மாநில அரசுகள் முடிவு எடுக்க வேண்டும். இது குறித்தும் விவசாய கழிவுகளை எரிப்பது குறித்தும் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து மத்திய அரசு சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் மற்றும் அதிகாரிகளுடன் செவ்வாய்க்கிழமை அவசர கூட்டத்தை நடத்த வேண்டும்" என்று உத்தரவிட்டார்.

மத்திய அரசு பொய் சொல்கிறது
இதையடுத்து மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விகாஸ் சிங், "மத்திய அரசு ஆச்சரியம் அளிக்கும் வகையில் விவசாயிகளை இதில் காக்க முயல்கிறது. பஞ்சாப் மாநிலத்தில் அடுத்தாண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், விவசாயிகளின் அதிருப்தியைச் சம்பாதித்துக் கொள்ள அவர்களுக்கு விருப்பம் இல்லை. காற்று மாசுக்கு விவசாய கழிவுகளை எரிப்பது 10% மட்டுமே காரணம் எனப் பொய்யான ஒரு தகவலை அளித்துள்ளது. காற்றின் தர மேலாண்மை ஆணையத்தின் நேற்றைய கூட்டத்தில் விவசாய கழிவுகளை எரிப்பதால் 35% வரை காற்று மாசு ஏற்படுவதாகக் கூறியுள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு தவறான ஒரு தகவலை அளித்துள்ளது" என்று தெரிவித்தார்.

ஆம் ஆத்மி சாடல்
அதேபோல ஆம் ஆத்மியும் உச்ச நீதிமன்றத்தை மத்திய அரசு தவறாக வழிநடத்துவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளது. டெல்லி காற்று மாசுக்கு விவசாய கழிவுகளை எரிப்பது 35% காரணம் என முதலில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்த மத்திய அரசு, இப்போது அப்படியே ஒரு யூடர்ன் போட்டு வெறும் 4% காரணம் எனப் பொய் சொல்வதாக ஆம் ஆத்மி விமர்சித்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications