தமிழகத்திற்கு 5.3 டிஎம்சி நீரை திறக்க கர்நாடகா அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!
டெல்லி: தமிழகத்திற்கு நிலுவையில் உள்ள 5.367 டிஎம்சி காவிரி நீரை திறக்க கர்நாடகா அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணையத்தின் 31 ஆவது கூட்டம் நடந்தது.
டெல்லியில் நடந்த காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுவை ஆகிய மாநிலங்களின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் முடிவில் தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என கர்நாடகா அரசுக்கு உத்தரவிடப்பட்டது. தமிழகத்திற்கு நிலுவையில் உள்ள 5.367 டிஎம்சி காவிரி நீரை திறக்க வேண்டும். ஜூலை மாதத்திற்கான 31.24 டி.எம்.சி நீரையும் உரிய நேரத்தில் திறந்துவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
காவிரி நதிநீர் பகிர்வு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு அடிப்படையில் காவிரி ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டன. கர்நாடகாவில் மழை அளவு, அணைகளின் நீர் அளவு உள்ளிட்டவைகளை ஆராய்ந்து தமிழ்நாட்டுக்கான காவிரி நீர் பகிர்வு அளவை பரிந்துரைப்பதுதான் காவிரி ஒழுங்காற்று குழு.
இந்த குழுவானது காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு பரிந்துரைக்கும். இதனை பரிசீலனை செய்து தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை திறந்துவிட உத்தரவிடக் கூடியது காவிரி மேலாண்மை ஆணையம்.
கடந்த மாதம் 21 ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் 30ஆவது கூட்டம் கூடியது. மே மாதம் தமிழ்நாட்டுக்கு 2.5 டி.எம்.சி. காவிரி நீர் பிலிகுண்டுலுவில் இருந்து திறந்துவிட கர்நாடக அரசுக்கு கூட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் கர்நாடகாவோ தங்களுக்கு வறட்சி இருப்பதாக கூறி தண்ணீரை திறந்து விட மறுத்துவிட்டது.
-
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே!












Click it and Unblock the Notifications