காவிரி நதி நீர் பிரச்சனை.. சிந்து ஒப்பந்தத்தை கையில் எடுத்த கர்நாடகா! உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: காவிரி நதி நீர் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு தனது தரப்பு பதில் மனுவை தாக்கல் செய்துள்ளது. 40 பக்கங்கள் கொண்ட அந்த பதில் மனுவில், மாறிவ ரும் சூழலுக்கு ஏற்ப முந்தைய முடிவுகளை மாற்றி அமைக்க வேண்டும் என்று கூறியதோடு, அதற்கு வலு சேர்க்கும் விதமாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியதை காவிரி வழக்குடன் ஒப்பிட்டு மேற்கோள் காட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டுக்கும் கர்நாடகாவுக்கும் காவிரி நதி நீரை பங்கீட்டு கொள்வதில் பிரச்சினை நிலவுகிறது. காவிரியில் தமிழகத்திற்கு தர வேண்டிய நியாயமான அளவை கொடுக்காமல் கர்நாடகா அடம் பிடித்து வருகிறது. காவிரியில் தமிழகத்திற்கு உரிய நீரை வழங்காமல் சாக்குபோக்கு சொல்லி வரும் கர்நாடக அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

Cauvery river water dispute Karnataka invokes the Indus Waters Treaty in Supreme Court

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மேற்காள் காட்டி

இது தொடர்பான வழக்குக்கு பதில் மனு தாக்கல் செய்த கர்நாடகா, தனது வாதத்தில் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மேற்காள் காட்டியுள்ளது கர்நாடகா தனது பதில் மனுவில் கூறியிருப்பதாவது:-

பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள காவிரி நீர்ப்பங்கீட்டு தீர்வை சமமற்ற நீர்ப்பங்கீடு மற்றும் மாறிய சூழ்நிலைகள் ஆகியவற்றை காரணமாகக் கொண்டு மறுபரிசீலனை செய்ய வேண்டும். மாறியுள்ள சூழ்நிலைகளை காரணம் காட்டி 1960-ம் ஆண்டு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று மத்திய அரசே கோரி வருகிறது.

குடிநீர் தேவைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்

நீர்ப்பங்கீட்டில் நிலவும் சமத்துவமின்மை மேலும் அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டும் மாறிய சூழ்நிலைகளின் அடிப்படையிலும் காவிரி நீர்த்தீர்ப்பாயத்தின் தீர்ப்பையும், அதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும். பொதுவாக, நீர்ப்பங்கீடு என்பது குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மறுபரிசீலனை செய்யப்படுவது வழக்கம்.

நீர்ப்பற்றாக்குறை ஏற்படும் ஆண்டுகளில், முதலில் குடிநீர் தேவைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். குடிநீர் இல்லாமல் மக்கள் வாழ முடியாது. அடுத்ததாக, வறட்சி பாதித்த பகுதிகளில் உள்ள வறண்ட நிலங்களுக்கான பாசனத்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். ஏனெனில், அந்த பகுதிகளில் பாசனம் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச வருமானத்தையும் வாழ்வாதாரத்தையும் வழங்குகிறது.

40 பக்க பதில் மனு

கர்நாடகத்தின் 4 நீர்த்தேக்கங்களில் தற்போது 48.878 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது. இதில் குடிநீர் தேவைக்காக 35 டி.எம்.சி. நீர் தேவைப்படுகிறது. மீதமுள்ள 13.878 டி.எம்.சி. நீர், கர்நாடகத்தில் வறண்ட நிலங்களுக்கான பாசனத் தேவையை பூர்த்தி செய்ய முற்றிலும் போதுமானதாக இல்லை" என்று கர்நாடகா தாக்கல் செய்துள்ள 40 பக்க பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+