செப்.29.. அதேநாள்! கர்நாடகா பந்த்துக்கு நடுவே காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அவசர கூட்டம்! பரபர பின்னணி
டெல்லி: தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே காவிரி பிரச்சனை என்பது விஸ்வரூபமெடுத்துள்ளது. இரு மாநிலங்களிலும் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில் வரும் 29ம் தேதி கர்நாடகா முழுவதும் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் அதேநாளான நாளை மறுதினம்(செப்டம்பர் 29) ம் தேதி காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம் நடைபெற உள்ள நிலையில் அதுபற்றிய பின்னணி தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டுக்கும், கர்நாடகாவுக்கும் இடையே தொடர்ந்து காவிரி நீர் பங்கீடு செய்வதில் பிரச்சனை உள்ளது. காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றங்களின் இறுதி தீர்ப்பு அடிப்படையில் தமிழகத்துக்கு காவிரியில் கர்நாடகா தண்ணீர் திறந்து விட வேண்டும்.

ஆனால் கர்நாடகா இதனை சரியாக செய்வது இல்லை. இந்த ஆண்டும் கர்நாடகா அரசு தமிழகத்துக்கு உரிய முறையில் தண்ணீர் திறந்து விடவில்லை. தென்மேற்கு பருவமழை சரியாக பெய்யவில்லை. இதனால் ஆகஸ்ட் மாதத்தில் 123 ஆண்டுகள் இல்லாத வறட்சி நிலவுகிறது.
கேஆர்எஸ் உள்பட காவிரியின் நீர் ஆதாரமாக உள்ள 4 அணைகளில் நீர்மட்டம் குறைந்துள்ளது என கூறி வருகிறது. இந்நிலையில் தான் கடந்த 13ம் தேதியில் இருந்து 15 நாட்கள் தமிழகத்துக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீரை
திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. இதனை கர்நாடகா எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாடிய நிலையில் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து கர்நாடகா சார்பில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு என்பது நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இதற்கிடையே நேற்று காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் என்பது காணொளி காட்சி மூலம் நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் காவிரியில் இருந்து முறையாக தண்ணீர் திறந்து விட வலியுறுத்தப்பட்டது. ஆனால் கர்நாடகா மறுத்தது. அதோடு கர்நாடகாவில் தண்ணீர் இல்லை என பஞ்சப்பாட்டு பாடத் தொடங்கியது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட காவிரி நீர் ஒழுங்காற்று குழு செப்டம்பர் 8 ம் தேதி முதல் அக்டோபர் 15ம் தேதி வரை வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீரை கர்நாடகா தமிழகத்துக்கு வழங்க வேண்டும் என காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு பரிந்துரை செய்தது. இதனால் ஷாக்கான கர்நாடகா அரசு காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு செய்ய முடிவு செய்துள்ளது.
இத்தகைய சூழலில் தான் நாளை மறுநாள் (செப்டம்பர் 29) ம் தேதி டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா புதுச்சேரி அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்தில் காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரையை செயல்படுத்த கர்நாடகா முறையாக செயல்படுத்த வேண்டும் என உத்தரவிடப்படலாம் என கூறப்படுகிறது.
அதேவேளையில் இந்த அவசர கூட்டத்தின்போது கர்நாடகா சார்பில் தங்களுக்கு குடிநீருக்கே தண்ணீர் இல்லை. இதனால் இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்படலாம். ஒருவேளை இதனை ஏற்க மறுக்கும்பட்சத்தில் கர்நாடகா அரசு மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாடலாம் என கூறப்படுகிறது. தற்போதைய சூழலில் கர்நாடகா, தமிழகம் இடையே காவிரி நீர் பங்கீடு தொடர்பான போராட்டங்கள் விஸ்வரூபமெடுத்துள்ளன.
கர்நாடகாவில் மண்டியாவில் பந்த் நடந்து முடிந்தது. பெங்களூரில் நேற்று அமைதியாக பந்த் நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து நாளை மறுநாள் டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை கூட்டம் நடக்கும் அதேநாளில் கர்நாடகாவில் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பந்த் மூலம் தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்து விடுவதை உடனே நிறுத்த கோரிக்கை வைக்கப்பட உள்ளது. இதற்கு பாஜக மற்றும் ஜேடிஎஸ் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
அதேபோல் தமிழ்நாட்டிலும் கர்நாடகா காங்கிரஸ் அரசை எதிர்த்து விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். தற்போது இருமாநிலங்களிலும் காவிரி நீர் பிரச்சனை என்பது பூதாகரமாகி உள்ளதால் நாளை மறுநாள் நடக்கும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications