தமிழ்நாட்டுக்கு 2,600 கன அடி நீரை கர்நாடகா திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!
டெல்லி: தமிழ்நாட்டுக்கு காவிரியில் வினாடிக்கு 2,600 கன அடிநீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி ஒழுங்காற்று குழு அண்மையில் கூடி தமிழ்நாட்டுக்கு நவம்பர் 1-ந் தேதி முதல் வினாடிக்கு 2,600 கன அடி நீரை நவம்பர் 23-ந் தேதி வரை கர்நாடகா திறந்துவிட பரிந்துரைத்திருந்தது. இதனைத் தொடர்ந்து டெல்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணையம் கூடி ஆலோசனை நடத்தியது.

டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் ஹல்தர் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு சார்பில் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா உள்ளிட்டோர் பங்கேற்றனர். கர்நாடகா, புதுச்சேரி மாநில அதிகாரிகளும் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தின் முடிவில் தமிழ்நாட்டுக்கு நவம்பர் 23-ந் தேதி வரை வினாடிக்கு 2,600 கன அடி நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும் என உத்தரவிட்டது காவிரி மேலாண்மை ஆணையம்.
முன்னதாக காவிரி ஒழுங்காற்று குழுவின் உத்தரவை ஏற்க முடியாது என கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் தெரிவித்திருந்தார். இதற்கு தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். அத்துடன், கர்நாடகாவில் இதுவரை இருந்த எந்த ஒரு அரசும் இப்படி முரண்டுபிடித்தது இல்லை. கர்நாடக அரசு உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்ற மாட்டோம் என்று சொல்வது ஜனநாயகத்துக்கு நல்லது அல்ல. எந்த ஒரு பிடியும் கொடுக்காமல் கர்நாடகா பேசுகிறது. நானும் 10 முதல்வர்கள், நீர்வளத்துறை அமைச்சர்களை பார்த்துள்ளேன். ஆனால் சித்தராமையாவும் டிகே சிவகுமாரும் இவ்வளவு பிடிவாதமாக இருப்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தில் நீதி கிடைக்காவிட்டால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். காவிரி ஒழுங்காற்றுக்குழு, காவிரி மேலாண்மை குழுவினர் சற்று மெத்தனமாக இருக்கின்றனர் என விமர்சித்திருந்தார்.
மேலும் காவிரியில் தமிழாட்டுக்கு காவிரி நீரை திறக்கக் கூடாது என கர்நாடகாவில் 2 மாதங்களாக தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கிருஷ்ணராஜ சாகர் அணை அமைந்துள்ள மண்டியா மாவட்டத்தில் 60 நாட்களாக இந்தப் போராட்டம் நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கர்நாடகா முதல்வர் சித்தராமையா இப்போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை நேரில் சந்தித்து, கர்நாடகா விவசாயிகளின் நலனை பாதுகாப்போம் என கூறியிருந்தார்.
இந்நிலையில் தமிழ்நாட்டுக்கு காவிரியில் மீண்டும் 2,600 கன அடிநீரை கர்நாடகா திறக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications