சிறையிலேயே தூக்கிய சிபிஐ.. கேசிஆர் மகள் கவிதா மீண்டும் கைது! மதுபான கொள்கை வழக்கில் அதிரடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஏற்கெனவே அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும், தெலுங்கானா முன்னாள் முதல்வர் கேசிஆர் மகள் கவிதாவை சிபிஐ தற்போது கைது செய்திருக்கிறது.

டெல்லி புதிய மதுபான கொள்கையில் முறைகேடு செய்திருப்பதாக கவிதா மீது வழக்குப் பதிவு செய்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வந்தது. இது குறித்த வழக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை தொடர்ந்து சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், ஓரிரு முறை மட்டுமே ஆஜரான கவிதா, பல முறை சம்மன்களை ஸ்கிப் செய்திருந்தார். இந்நிலையில் மார்ச் 15ம் தேதி ஹைதராபாத்தில் அவரது இல்லத்தில் சுமார் 5 மணி ரெய்டு நடத்தப்பட்டு கவிதாவை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.

CBI arrested Kavita in connection with the Delhi Excise policy violation case

ஏற்கெனவே இந்த வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கவிதாவின் கைது சலசலப்புகளை ஏற்படுத்தியிருந்தது. கவிதாவின் கைது மட்டுமல்லாமல், ஜார்க்ண்ட் முதலமைச்சர் உட்பட பல முக்கிய தலைவர்களை அடுத்தடுத்து அமலாக்கத்துறை கைது செய்துள்ளதால் பிஆர்எஸ் கட்சி போராட்டத்தில் இறங்கியுள்ளது. மறுபுறம், அமலாக்கத்துறை தனது விசாரணையையும், ரெய்டையும் தீவிரப்படுத்தியிருக்கிறது.

கவிதாவின் நெருங்கிய உறவினர்கள் சிலர் விரைவில் கைது செய்யப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், கடந்த மார்ச் 22ம் தேியுடன் கவிதாவின் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், அவரை மேலும் 14 நாட்கள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து அவர் டெல்லி திகார் சிறைக்கு மாற்றப்பட்டார். அமலாக்கத்துறை விசாரணை ஒருபுறம் எனில், மறுபுறம் சிறையில் வைத்து கவிதாவிடம் சிபிஐ-யும் கடந்த வாரம் விசாரணையை நடத்தியிருந்தது. இந்நிலையில், இந்த விசாரணையின் அடிப்படையில் கவிதாவை சிபிஐ கைது செய்திருக்கிறது.

பின்னணி: கடந்த 2021-22ம் ஆண்டு டெல்லி யூனியன் பிரதேசத்தில் புதிய மதுபான கொள்கை அறிவிக்கப்பட்டது. அதாவது டெல்லியில் மதுபான விற்பனை அரசிடம் இருந்து 4 கார்ப்பரேசன்கள் கைகளுக்கு மாறின. மொத்த மது விற்பனையில் 50% இந்த 4 கார்ப்பரேசன்கள் பகுதிகளில் நடைபெறுகிறது. டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு லைசன்ஸ் தரப்பட்டது.

இதில் ஏராளமான முறைகேடுகள் என்று புகார்கள் எழுந்தன. அதாவது, மது விற்பனை செய்ய லைசன்ஸ் பெற்றவர்களுக்கு ரூ.144.36 கோடிக்கு மேல் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், விதிகள், செயல்முறைகளைப் பின்பற்றாமல் ஒரு நிறுவனத்தின் ரூ.30 கோடி மதிப்பிலான டெபாசிட் பணம் திருப்பி அளிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இது குறித்து சிபிஐ விசாரணைக்கு துணை நிலை ஆளுநர் சக்சேனா பரிந்துரை செய்திருந்தார். இதனையடுத்து அமலாக்கத்துறையும், சிபிஐ-யும் வழக்கு விசாரணையை கையில் எடுத்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+