நீட் வினாத்தாள் கசிவு.. மூளையாக செயல்பட்ட ராக்கி சிக்கினார்.. மடக்கி பிடித்த சிபிஐ.. பரபர தகவல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தேசிய தேர்வு முகமையே நீட் வினாத்தாள் கசிவு என்று கூறியது மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நீட் வினாத்தாள் கசிவுக்கு மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளி என கருதப்படும் ராகேஷ் ரஞ்சன் என்பவரை சிபிஐ கைது செய்தது. இது தொடர்பாக பரபர தகவல் வெளியாகியுள்ளது.

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு மே 5 ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்வின் முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி வெளியாகி பெரும் சர்ச்சையாக வெடித்தன. நீட் தேர்வின் முறைகேடுகள் அடுத்தடுத்து வெளிவந்து கொண்டே இருக்கின்றன. ஒரே தேர்வில் எழுதியவர்கள் முதலிடம் பெற்றது, மதிப்பெண் குளறுபடி, நீட் வினாத்தாள் கசிவு என அடுத்தடுத்து சர்ச்சைகள் எழுந்தன.

NEET CBI Central Govt

18 ஆம் தேதி விசாரணை: நீட் தேர்வு முறைகேடுகள் வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. உச்சநீதிமன்றத்திலும் நீட் முறைகேடுகள் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கின் விசாரணை ஜூலை 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. பல லட்சம் மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மூளையாக செயல்பட்டவர் கைது: இந்த நிலையில், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மூளையாக செயல்பட்ட நபர் என்று கூறப்படும் ராக்கி என்ற ராகேஷ் ரஞ்சன் சிபிஐயால் இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கிங்க்பின் ஆக ராக்கி செயல்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. பாட்னா, கொல்கத்தாவின் சில பகுதிகள் என மொத்தம் 4 இடங்களில் சிபிஐ சோதனை மேற்கோண்ட நிலையில், ராக்கி ரஞ்ச்ன் கைது செய்யப்பட்டுள்ளார்.

திடுக்கிடும் தகவல்: ராக்கி ரஞ்ச்சனை 10 நாள் காவலில் சிபிஐ எடுத்துள்ளது. இந்த விசாரணையின் போது மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என சொல்லப்படுகிறது. நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் 12 க்கும் மேற்பட்டவர்கள் இதுவரை கைது செய்யப்பட்டவர்கள். ஜார்க்கண்டின் ஹசிராபாக்கில் உள்ள பள்ளியின் தலைமை ஆசிரியை மற்றும் துணை தலைமை ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளனர்.

பள்ளியில் இருந்து கசிந்தது: நீட் வினாத்தாள் ஹசாரிபாக் பள்ளியில் இருந்துதான் கசிந்து இருக்கலாம் என தகவல் வெளியாகியிருந்தது. அதாவது, மே 5 ஆம் தேதி நடைபெற இருந்த நீட் தேர்வுக்கான வினாத்தாள், இரண்டு நாட்களுக்கு முன்பாக அங்குள்ள எஸ்.பி.ஐ வங்கி கிளைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அங்கிருந்து இரண்டு செட்கள் ஹசாரிபாக்கில் உள்ள ஓயாசிஸ் பள்ளிக்கு எடுத்து செல்லப்பட்டு இருக்கிறது. இந்த பள்ளியில் நீட் தேர்வு நடைபெற்றது. இந்த பள்ளிக்கு தேர்வு வினாத்தாள் கொண்டு செல்லப்பட்டதும் சீலை உடைக்கப்பட்டு இருக்கிறது. அப்போது ராக்கியும் அங்கே இருந்ததாக சிபிஐ வட்டாரங்கள் சொல்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+