குண்டைத் தூக்கிப் போட்ட விஜய்.. 41 பலிக்கு தமிழக அரசு தான் காரணமாம்! சிபிஐ விசாரணையில் கசிந்த தகவல்!
டெல்லி: கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற பிரசார கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் நேரில் ஆஜராகி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இந்த விசாரணையின் போது, தமிழக அரசின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஏற்பட்ட கடுமையான குறைபாடுகளே இந்த பேரழிவுக்கு காரணம் என விஜய் குற்றம் சாட்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி, கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தவெக பிரசார கூட்டத்தில், திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்த இந்த சம்பவம், தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனையடுத்து கரூர் துயர சம்பவம் தொடர்பான வழக்கை, உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. சம்பவம் நடைபெற்ற இடம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

கரூர் நெரிசல் சம்பவம்
இதேபோன்று, கரூர் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அண்மையில் சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் விஜய் பயன்படுத்திய பரப்புரை வாகனத்தையும் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பின்னர், அந்த பேருந்தின் ஓட்டுநரிடமும் விசாரணை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக தவெக தலைவர் விஜயை நேரில் ஆஜராக கூறி, கடந்த 6 ஆம் தேதி சிபிஐ சம்மன் அனுப்பியது.
41 பேர் உயிரிழப்பு
அதன்படி, இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி சென்ற விஜய், காலை 11.35 மணியளவில் சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார். அவருடன் தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆன்ந்த், சிடிஆர் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா, உள்ளிட்ட 6 பேர் சென்றனர். தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள், விஜயிடம் அடுக்கடுக்காக 100 கேள்விகளை முன்வைத்து தீவிர விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. குறிப்பாக, கூட்ட நெரிசல் எவ்வாறு ஏற்பட்டது? குறுகிய பரப்பளவில் எத்தனை பேர் கூடுவார்கள் என்பது முன்கூட்டியே கணிக்கப்பட்டதா?
கரூர் பிரசார கூட்டம்
பரப்புரை நிகழ்வுக்கு விஜய் தாமதமாக வந்ததற்கான காரணம் என்ன? குழந்தை காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டபோது அங்கிருந்த சூழல் எப்படி இருந்தது? போலீசார் தடியடி நடத்தியது குறித்து தெரியுமா? அசம்பாவிதம் ஏற்பட்டதும் பரப்புரை மேடையை விட்டு வெளியேறியது ஏன்? என பல்வேறு கோணங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜய் சிபிஐ விசாரணை
விசாரணையின் போது, கூட்டத்தை கட்டுப்படுத்த தேவையான போலீஸ் பாதுகாப்பு, போக்குவரத்து ஒழுங்குமுறை, அவசர மருத்துவ வசதிகள் ஆகியவை போதிய அளவில் ஏற்பாடு செய்யப்படவில்லை என விஜய் சிபிஐ அதிகாரிகளிடம் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த பாதுகாப்பு குறைபாடுகளே 41 உயிர்களை பலியாக்கியதாக அவர் குற்றம்சாட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக அரசு
இதற்கு முன்பு, தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார், தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் 8 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தியிருந்தனர். மேலும், கரூர் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விஜய் பயன்படுத்திய பரப்புரை வாகனமும் சிபிஐயால் ஆய்வு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications