விஜய்க்கு நேரம் சரியில்லை.. சிபிஐ சம்மன், ஜனநாயகனுக்கு சிக்கல்.. நேரடியாக பிரஷர் போடும் டெல்லி "பவர்"
டெல்லி: சிபிஐ கரூர் விசாரணை, ஜனநாயகனுக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதில் சிக்கல் என்று விஜய்க்கு அடுத்தடுத்து நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.
நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் ஜனவரி 9 அன்று வெளியாக உள்ள நிலையில், அதற்குத் தேவையான தணிக்கைச் சான்றிதழை வழங்க மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் (CBFC) தாமதிப்பதால், தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்ஷன்ஸ், சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்துள்ளது.

யு சான்றிதழ் வழங்க கோரி தொடுக்கப்பட்ட வழக்கு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. படத்தில் மத உணர்வை புண்படுத்தும் காட்சிகள் உள்ளதாக புகார் வைக்கப்பட்டு உள்ளது. படக்காட்சிகள் காரணமாக யு சான்றிதழ் கிடைப்பது சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
ஹெச். வினோத் இயக்கத்தில் உருவான இப்படம் டிசம்பர் 18 அன்று CBFC-யிடம் சமர்ப்பிக்கப்பட்டது. வாரியம் பரிந்துரைத்த சிறிய மாற்றங்களுக்கும் படக்குழு சம்மதித்தபோதிலும், சான்றிதழ் இன்னும் நிலுவையில் உள்ளது.
ஜனநாயகன் படத்திற்கு சிக்கல்
இந்தத் தாமதம் தமிழக திரையரங்கு உரிமையாளர்கள், ரசிகர்கள் மத்தியில் நிச்சயமற்ற நிலையை உருவாக்கியுள்ளது. 'ஜனநாயகன்' மற்றும் ஜனவரி 10 அன்று வெளியாக உள்ள சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' ஆகிய இரு படங்களுக்குமான முன்பதிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இரு படங்களும் சான்றிதழுக்காக காத்திருக்கின்றன.
இதற்கிடையில், விஜய்யின் அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) பிரதிநிதிகள் இந்தத் தாமதம் குறித்து ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இன்று, துணைப் பொதுச் செயலாளர் சி.டி. நிர்மல் குமார் CBFC-க்கு எச்சரிக்கை விடுத்தார். சான்றிதழ் செயல்முறைக்கு இன்னும் சில மணிநேரங்களே உள்ளன எனக் குறிப்பிட்டார்.
ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் நிர்மல் குமார் கூறியதாவது: "மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்திற்கான காலக்கெடு இன்னும் சில மணிநேரங்கள்தான். இல்லையெனில், நாங்கள் அடுத்தகட்ட நடவடிக்கையை எடுப்போம். விஜய் அண்ணனுடன் கலந்துரையாடி அடுத்தகட்ட நடவடிக்கையை முடிவு செய்வோம். மத்திய திரைப்பட சான்றிதழ் வாரிய உறுப்பினர்கள் டிசம்பர் மாத நடுப்பகுதியிலிருந்து திரைப்பட சான்றிதழை முடக்கி வைத்துள்ளனர்."
தணிக்கைச் சான்றிதழ் இல்லாதபோதும், 'ஜனநாயகன்' பட டிக்கெட்டுகள் நாட்டின் சில திரையரங்குகளில் முன்பதிவுக்காக திறக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தற்போதைய சூழலில் குழப்பத்தை அதிகரித்துள்ளது.
சிபிஐ விசாரணை
கரூர் வழக்கில் தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. ஜனவரி 12ம் தேதி டெல்லியில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இந்த வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ. அதிகாரிகள், விஜய் பங்கேற்ற திரைப்பட நிகழ்வுகள் மற்றும் அரசியல் கூட்டங்களின் காலவரிசையை திரட்டியுள்ளனர். பின்பு, இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்ததில் சுவாரஸ்யமான தகவல்கள் அவர்களுக்கு கிடைத்ததாக கூறப்படுகிறது.
இதன் அடிப்படையில் அதிகாரிகள் கேட்டதாவது: "விஜய் 'ஜனநாயகன்' நிகழ்ச்சி உள்பட அனைத்து சினிமா நிகழ்வுகளுக்கும் குறித்த நேரத்தில் வந்துள்ளார். மலேசியா நிகழ்விற்கு கூட முதல்நாள் சென்றுள்ளார். ஆவர் படப்பிடிப்புகளுக்கும் ஒருபோதும் தாமதமாக வந்தது கிடையாது."
விஜய் டெல்லி பொங்கல்
"ஆனால், அவர் ஏன் அரசியல் கூட்டங்களுக்கு மட்டும் ஏன் தாமதமாக வருகிறார்? அதிக கூட்டத்தைக் காட்டுவதற்கு இதை வேண்டுமென்றே செய்தாரா? கரூர் சம்பவத்திலும் இதுதான் நடந்ததா?" என அதிகாரிகளின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு தமிழக வெற்றிக் கழகம் (TVK) தரப்பில் எந்தப் பதிலும் இல்லை.
கரூர் வழக்கு தொடர்பாக நடிகர் விஜய்க்கு பொங்கல் பண்டிகைக் காலத்தில் சரியாக சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. இதனால் விஜய் பொங்கலை டெல்லியில் கொண்டாடினாலும் அதிசயம் இல்லை என்கிறார்கள்.
அஜித் குமார் வாக்குமூலம்
இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, நடிகர் விஜயின் பிரச்சார வாகனத்தை ஓட்டிய அஜித்குமார், முக்கிய சாட்சியாக சம்மன் அனுப்பப்பட்டு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
சிபிஐ அதிகாரிகள், சம்பவம் நடந்த நாளில் நடந்த நிகழ்வுகளின் வரிசையை அஜித்குமாரிடம் விரிவாகக் கேள்வி கேட்டுள்ளனர். அன்றைய தினத்திற்கான அசல் திட்டம் என்ன, கரூருக்கு பயணிக்க டிரைவருக்கு எப்போது அறிவுறுத்தல்கள் கிடைத்தன, மற்றும் அவர் சம்பவ இடத்தை எப்போது அடைந்தார் என்பன போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன.
காவல்துறை அவருக்கு ஏதேனும் வழிமுறைகளை வழங்கியதா அல்லது வாகனத்தை சாலையின் எதிர் திசையில் நிறுத்தும்படி யார் அறிவுறுத்தினார் என்றும் விசாரிக்கப்பட்டது. பிரச்சார வாகனத்தை கூட்டத்திற்குள் ஓட்டச் சொன்னது யார், சம்பவம் நடந்தபோது அவர் வாகனத்திற்கு முன்னால் தனிப்பட்ட முறையில் எதைக் கண்டார் என்பதும் விசாரணையின் ஒரு பகுதியாகும்.
சம்பவ இடத்தில் ஆம்புலன்ஸ் வந்தடைந்தது குறித்தும் சிபிஐ கேள்வி எழுப்பி உள்ளனர். இதற்கெல்லாம் அஜித் குமார்.. விஜய்க்கு எதிராக சாட்சி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது விஜய்க்கு சிக்கலை ஏற்படும் சில கடுமையான பதில்களை அவர் கூறியதாக தெரிகிறது.
அந்த நேரத்தில் விஜய் என்ன செய்து கொண்டிருந்தார், அவருக்கு நிலைமை தெரிந்ததா, சூழ்நிலை மோசமாக இருந்தபோதிலும் ஏன் பேச்சு தொடர்ந்தது என்றும் அஜித்குமாரிடம் கேள்வி கேட்கப்பட்டது. வாகனத்திற்கு முன்னால் நடந்த சம்பவம் குறித்து விஜய்க்கு யார் தகவல் தெரிவித்தனர் என்பதை அதிகாரிகள் கேட்டுள்ளனர். இதில் விஜய்யை சிக்க வைக்கும் சில பதில்களை அவர் அளித்துள்ளாராம்.
கூடுதலாக, அஜித்குமாரும் விஜயும் தவிர, சம்பவம் நடந்தபோது வாகனத்திற்குள் யார் யார் இருந்தார்கள் என்று அடையாளம் காட்டும்படி அஜித்குமாரிடம் கேட்கப்பட்டு உள்ளது. ஆதவ் அர்ஜுனாவின் பங்கு மற்றும் அவரது நடவடிக்கைகள் குறித்து இதில் கேள்விகள் கேட்கப்பட்டது.
இந்த விசாரணையில் 90-க்கும் மேற்பட்ட கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டது. அஜித்குமார் அளித்த பதில்கள் மற்றும் விசாரணையில் சேகரிக்கப்படும் ஆதாரங்களின் அடிப்படையில், விஜய்க்கு சம்மன் அனுப்பப்படலாம் என்கிறார்கள்.
-
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சம் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
வைகோ பெட்டி படுக்கையுடன் தவெக செல்ல தயார்.. மதிமுக குறித்து புட்டுபுட்டு வைத்த மல்லை சத்யா











Click it and Unblock the Notifications