Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

NSE சித்ரா ராமகிருஷ்ணன் விவகாரத்தில் ஆட்டுவித்த அந்த ‘மர்ம தமிழ் சாமியார்’- விரைவில் புதிர் விலகும்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தேசிய பங்கு சந்தை முன்னாள் தலைமை செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணன் விவகாரத்தில் அவரை ஆட்டுவித்த மர்ம தமிழ் சாமியார் குறித்த புதிர் அடுத்த சில நாட்களில் அம்பலமாகும் என்கின்றன சிபிஐ வட்டாரங்கள்.

Recommended Video

    முன்னொரு காலத்தில் | Chitra Ramkrishna NSE | Himalayan Yogi

    தமிழ்நாட்டைச் சேர்ந்த சித்ரா ராமகிருஷ்ணன்... இந்திய புலனாய்வுத் துறையை மண்டையை காய வைத்துக் கொண்டிருக்கிறார். நாட்டின் அதி முக்கியமான தேசிய பங்கு சந்தையின் தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர் சித்ரா ராமகிருஷ்ணன்.

    தேசிய பங்கு சந்தை தொடர்பான அத்தனை விவகாரங்களையும் தாம் நம்புகிற மர்ம யோகி அல்லது சாமியார் ஒருவருக்கு இ மெயில் மூலம் ஒன்றுவிடாமல் பகிர்ந்திருக்கிறார். இதன் மூலம் பெருமளவு சித்ரா ராமகிருஷ்ணன் ஆதாயம் அடைந்திருக்கிறார் என்பது தேசிய பங்கு சந்தை வாரியமான செபியின் புகார். இது தொடர்பாக விசாரணை நடத்தி சித்ரா ராமகிருஷ்ணனுக்கு பல கோடி ரூபாய் அபராதம், பல்வேறு பங்கு வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது.

    சிக்கிய சித்ரா ராமகிருஷ்ணன்

    சிக்கிய சித்ரா ராமகிருஷ்ணன்

    இதனைத் தொடர்ந்து வருமான வரித்துறை, சிபிஐ என அடுத்த கட்டங்களுக்கும் சித்ரா ராமகிருஷ்ணன் வழக்கு சென்றுள்ளது. இதையடுத்து சித்ரா ராமகிருஷ்ணனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி ஏராளமான ஆதாரங்களை கைப்பற்றிச் சென்றனர். இந்த சோதனையைத் தொடர்ந்து சித்ரா ராமகிருஷ்ணனை சிபிஐ விசாரணைக்கு அழைத்தது. முன்னதாக சித்ரா ராமகிருஷ்ணன் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லாதவகையில் அவருக்கு எதிராக சிபிஐ லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியது.

    சிபிஐ விசாரணை

    சிபிஐ விசாரணை

    இவ்வளவு முன்னெச்சரிக்கைகளைத் தொடர்ந்து டெல்லியில் சிபிஐ அதிகாரிகள், சித்ரா ராமகிருஷ்ணனிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணைகளின் போதும், இமயமலை சாமியார் ஒரு யோகி; உருவமற்றவர்; அவர் அனுப்பிய இ மெயில்கள் மூலம் நான் வழிநடத்தப்பட்டேன் என சொல்லி கிறுகிறுக்க வைத்தார். ஆனால் சித்ரா ராமகிருஷ்ணனுக்கு இமயமலை சாமியார் அனுப்பிய இ மெயில்களை சுட்டிக்காட்டி அதாவது நீங்க இளமையாக இருக்கீங்க... செசல்ஸ் தீவுக்கு போய் கடல் குளியல் போடலாம் என்ற விவகாரங்களை வைத்து துருவி துருவி கேள்வி கேட்க சித்ரா ராமகிருஷ்ணனிடம் இருந்து எந்த பதிலும் இல்லை என்கின்றன சிபிஐ வட்டாரங்கள்.

    ஊழல், கொலைச்சதியில் சாமியார்கள்

    ஊழல், கொலைச்சதியில் சாமியார்கள்

    இந்திய அரசியலில் பல்வேறு ஊழல் விவகாரங்கள் வெளிவந்த போதெல்லாம் சந்திராசாமியார் என்பவர் பெயர் எப்போதும் அடிபடும். ராஜீவ்காந்தி படுகொலை வழக்கிலும் சந்திராசாமியார் அடிபட்டது. அதேபோல் திரேந்திர பிரம்மாச்சாரி என்ற சாமியார் பெயரும் அடிபட்டதும் உண்டு. போபர்ஸ் பீரங்கி பேர ஊழல், அந்நிய செலாவணி மோசடி, ராஜீவ்காந்தி படுகொலை இப்படியான நாட்டை அதிர வைத்த சம்பவங்களில் சாமியார்களின் தலைகள் உருண்டது உண்டு. இப்போது சித்ரா ராமகிருஷ்ணன் விவகாரத்திலும் மர்ம சாமியார் சிக்கியிருக்கிறார்.

    சாமியார் புதிர் விலகுகிறது

    சாமியார் புதிர் விலகுகிறது

    சித்ரா ராமகிருஷ்ணனுக்கு மர்ம சாமியார் அனுப்பிய இ மெயில்களை ஆராய்ந்த அதிகாரிகள் அவர் ஒரு தமிழர் என்பதை கண்டுபிடித்துள்ளனர். தமிழ் பக்தி இலக்கியங்களில் காமம் தொடர்பான பாடல்களை சித்ரா ராமகிருஷ்ணனும் அந்த மர்ம சாமியாரும் பரவசத்துடன் பகிர்ந்து கொண்டதை அந்த இ மெயில்கள் அம்பலப்படுத்தி இருக்கின்றன. மர்ம சாமியாரின் இ மெயில்கள் அனுப்பி வைக்கப்பட்ட ஐபி முகவரி மூலம் அவர் யார் என்கிற புதிரை அவிழ்க்கும் முயற்சிகளில் அதிகாரிகள் இறங்கி உள்ளனர். அடுத்த சில நாட்களில் சித்ரா ராமகிருஷ்ணன் மற்றும் அந்த மர்ம சாமியார் குறித்த பல அதிர்ச்சி தகவல்கள் அம்பலத்துக்கு வரும் என்கின்றன டெல்லி தகவல்கள்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+