காங். அலுவலகத்திற்கு விரைந்த சிபிஐ.. ப.சியை கைது செய்ய முயற்சி.. இரண்டே நிமிடத்தில் எஸ்கேப்!

முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரத்தை கைது செய்ய டெல்லி காங்கிரஸ் தலைமையகத்திற்கு சிபிஐ அதிகாரிகள் வந்தனர்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சுவர் ஏறி குதித்து வீடு புகுந்து ப. சிதம்பரம் அதிரடி கைது

    டெல்லி: முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரத்தை கைது செய்ய டெல்லி காங்கிரஸ் தலைமையகத்திற்கு சிபிஐ அதிகாரிகள் வந்தனர். ஆனால் அங்கு ப. சிதம்பரம் இல்லாததால் அங்கிருந்து அதிகாரிகள் வெளியேறினர்.

    ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு உச்ச கட்ட பரபரப்பில் சென்று கொண்டு இருக்கிறது. இதில் அடுத்த என்ன நடக்க போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் நேற்று ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

    அதன் பின் ப. சிதம்பரம் அவசர அவசரமாக உச்ச நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். ஆனால் இதை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

    என்ன கைது

    என்ன கைது

    இந்த நிலையில் எப்போது வேண்டுமானாலும் ப. சிதம்பரம் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது. ப. சிதம்பரம் இன்று கைது செய்யப்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இதனால் டெல்லியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரிக்கப்படவில்லை.

    பேட்டி அழியத்தார்

    பேட்டி அழியத்தார்

    டெல்லி காங்கிரஸ் தலைமையகத்தில் ப. சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். வழக்கறிஞர்கள் கபில் சிபில், சல்மான் குர்ஷித் உடன் இருந்தனர். அங்கு சுமார் 8 நிமிடம் ப. சிதம்பரம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். ஆனால் அவர் எந்த கேள்வியையும் எதிர்கொள்ளவில்லை.

    என்ன வேகம்

    என்ன வேகம்

    இதையடுத்து அங்கு வேகவேகமாக ப. சிதம்பரத்தை கைது செய்ய டெல்லி காங்கிரஸ் தலைமையகத்திற்கு சிபிஐ அதிகாரிகள் வந்தனர். அவரை கைது செய்ய காங்கிரஸ் அலுவலகம் வெளியே அதிகாரிகள் குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    ஆனால் இல்லை

    ஆனால் இல்லை

    ஆனால் சிபிஐ வருகைக்கு முன் ப. சிதம்பரம் அங்கிருந்து வெளியேறினார். அதிகாரிகள் வருவதற்கு 2 நிமிடத்திற்கு முன்பே அவசர அவசரமாக பேட்டியை முடித்துக் கொண்டு, ப. சிதம்பரம் அங்கிருந்து வெளியேறினார். இதனால் அவரை கைது செய்ய முடியாமல் சிபிஐ அதிகாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+