நீங்கள் விசாரிக்கப்படவே தகுதியற்றவர்கள்.. சிபிஐ வழக்கில் தலைமை நீதிபதி கடும் கோபம்!
சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Recommended Video

டெல்லி: சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. அதில் சிபிஐ இயக்குனர் தொடர்பான விசாரணை அறிக்கையை விஜிலென்ஸ் கடந்த வாரம் தாக்கல் செய்தது.
அவர் மீதான புகார் மற்றும் மத்திய அரசின் நடவடிக்கை தொடர்பான அறிக்கையை கடந்த வாரம் தாக்கல் செய்தது. இந்த அறிக்கை மீதான பதில் மனுவை சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா நேற்று தாக்கல் செய்தார். அதன் மீதுதான் இன்று விசாரணை நடந்தது.

பதில் அறிக்கை
நேற்று மாலை சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா இந்த விசாரணை அறிக்கை குறித்த தன்னுடைய பதில் மனுவை தாக்கல் செய்தார். அவருக்கு உச்ச நீதிமன்றம் கூடுதல் அவகாசம் அளிக்கவில்லை. இதனால் நேற்று மாலையே உச்ச நீதிமன்றத்தில் அவர் தனது பதில் மனுவை சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்தார்.

கோபமாக கொடுத்தார்
இந்த பதில் மனு மீது இன்று விசாரணை நடந்தது. விசாரணை தொடங்கியவுடன் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கையில் பேப்பர் ஒன்றுடன் வந்தார். அந்த பேப்பரின் காப்பிகளை அரசு தரப்பிற்கும், அலோக் வெர்மா தரப்பிற்கும் அளித்தார். இதை நீங்களே படியுங்கள். உங்களை விசாரிக்க வேண்டிய அவசியம் இருக்கிறதா என்று நீங்களே கூறுங்கள் என்று கோபமாக கூறினார்.

என்ன பேப்பர்
அந்த பேப்பரில் ஆங்கில ஊடகம் ஒன்றின் செய்தி இருந்தது. அதில் சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா நேற்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவின் விவரங்கள் அப்படியே இருந்தது. இந்த பதில் மனு சீலிடப்பட்ட கவரில் அளிக்கப்பட்டது. அது எப்படி லீக் ஆனது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள்.

எப்படி என்று கேட்டார்
இதை கூட உங்களால் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியாதா என்று கோபமாக கேட்டார். அதோடு சிபிஐ அமைப்பில் உள்ள அதிகாரிகளின் பாதுகாப்பு கருதியும் அலுவல் விஷயங்களை கருதியும்தான் சீல் செய்து அறிக்கையை தாக்கல் செய்ய சொன்னோம். ஆனால் அது இப்படி செய்தியில் வந்தால் என்ன அர்த்தம் என்று கேட்டார்கள்.

ஒத்தி வைத்தார்
இதையடுத்து கோபமாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் , நீங்கள் எல்லாம் விசாரிக்கப்படுவதற்கு தகுதியற்றவர்கள். இவ்வளவு கவனமின்றி இருக்கும் உங்களை நாங்கள் ஏன் விசாரிக்க வேண்டும், என்று கோபமாக கூறினார். இந்த விவரம் எப்படி கசிந்தது என்று இரண்டு தரப்பும் விவரிக்க வேண்டும் என்று கூறி வழக்கு விசாரணையை நவம்பர் 29ம் தேதி ஒத்திவைத்தார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications