சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வுகள்.. மேஜர் மாற்றங்கள் என்னென்ன?
டெல்லி: 2026-ம் கல்வியண்டு முதல் 10-ம் வகுப்புக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வு நடத்த சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. புதிய கல்வி கொள்கை அடிப்படையில் ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வு நடத்த உள்ளதாக அறிவித்துள்ள சிபிஎஸ்இ. முதற்கட்ட பொதுத்தேர்வை அடுத்த பிப்ரவரி 17 முதல் மார்ச் 6 வரையும், 2-ம் கட்ட பொதுத்தேர்வை 2026 மே 5 முதல் 20 வரையும் நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ), தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி), கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் (கேவிஎஸ்) மற்றும் நவோதயா வித்யாலயா (என்விஎஸ்) ஆகியவை இணைந்து நடத்திய ஆலோசனை கூட்டத்தில், சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டிலிருந்து ஒரேயொரு பொதுத்தேர்வுக்குப் பதிலாக இனி 2 முறை பொதுத்தேர்வுகள் நடத்தப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான வரைவு அறிக்கைக்கு சிபிஎஸ்இ ஒப்புதல் அளித்திருக்கிறது. இந்த வரைவு அறிக்கைக்கு மார்ச் 9ம் தேதி வரை கருத்துக்கள் பொதுமக்கள் அனுப்பலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இனி சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு எழுதுவும் மாணவர்கள் அடுத்த ஆண்டு முழுவதும்இரண்டு முறை எழுதலாம். 2026-ஆம் ஆண்டிலிருந்து, முதல் கட்டமாக பொதுத்தேர்வுகள் பிப்ரவரி - மார்ச் மாத காலக்கட்டத்திலும் அடுத்தக்கட்டமாக பொதுத்தேர்வு மே மாதமும் நடத்தப்பட இருககிறது. இதன்படி முதற்கட்ட பொதுத்தேர்வை 2026ம் ஆண்டு பிப்ரவரி 17 முதல் மார்ச் 6 வரையும், 2-ம் கட்ட பொதுத்தேர்வை மே 5 முதல் 20 வரையும் நடத்த முடிவு செய்திருக்கிறது சிபிஎஸ்இ.
இரண்டு முறை சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் எந்த முறை தாங்கள் சிறப்பாக எழுதி அதிக மதிப்பெண் பெறுகிறார்களோ அந்த மதிப்பெண் சான்றிதழை பத்தாம் வகுப்பு சான்றிதழாகப் பெற்றுக்கொள்ளலாம். இரண்டு முறை பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டாலும் முழு பாடங்களையும் உள்ளடக்கித்தான் அவற்றிலிருந்து கேள்விகள் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது பாதி பாதியாக கல்லூரிகளில் உள்ளது போல் பருவத்தேர்வு போல் கேள்விகள் இருக்காது. எப்போது தேர்வு எழுதினாலும் முழு பாடத்திற்கான தேர்வுகளையே எழுத வேண்டும். அதேநேரம் உள்ளீட்டு தேர்வுகளும் செய்முறை தேர்வுகளும் இப்போது உள்ள நடைமுறை போலவே வரும் ஆண்டுகளிலும் ஒரேயொரு முறை மட்டுமே நடத்தப்படும் என்று வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications