CBSE 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு! ஆதிக்கம் செலுத்தும் தென் மாநிலங்கள்.. கடைசி இடத்தில் யார்!
டெல்லி: இப்போது சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், இதில் தென் மாநிலங்களே அதிகம் ஆதிக்கம் செலுத்தியுள்ளன.
இன்று காலை முதலில் சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அதைத் தொடர்ந்து இப்போது 10ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளும் வெளியாகியுள்ளது.

முடிவுகள் வெளியீடு: தேர்வு எழுதிய மாணவர்கள் 10 ஆம் வகுப்பு முடிவை cbse.gov.in அல்லது results.cbse.nic.in ஆகிய தளங்களில் தெரிந்து கொள்ளலாம். மேலும், DigiLocker மூலமாகவும் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ள முடியும். மாணவர்கள் தங்களின் ரோல் நம்பர், பள்ளி எண் மற்றும் அட்மிட் கார்டு ஐடி ஆகியவற்றை வழங்கி தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ள முடியும்.
இந்த ஆண்டு நாடு முழுக்க 24 லட்சம் பேர் 10ஆம் வகுப்புத் தேர்வுகளை எழுதினர். கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி மார்ச் 13ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெற்றது.
எப்படிப் பார்க்க வேண்டும்: முதலில் cbse.nic.in என்ற தளத்திற்குச் செல்லவும்.. அதன் ஹோம் பேஜில் தேர்வு முடிவுகள் என்று இருக்கும்.. அதை கிளிக் செய்தோம் என்றால் அடுத்த பக்கத்திற்குச் செல்லும்.. அதில் 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளை என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், ரோல் நம்பர், பள்ளி எண், மைய எண், பிறந்த தேதி ஆகியவற்றைப் பதிவிடுங்கள். அதை க்ளிக் செய்தால் அடுத்த பக்கத்தில் தேர்வு முடிவுகள் வந்துவிடும்.
சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள்.. கேந்திரிய வித்யாலயாவுக்கு 3ஆம் இடம் தான்.. அப்போ முதல்ல யார் தெரியுமா
நாடு முழுக்க மொத்தம் 22,51,812 பேர் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதப் பதிவு செய்த நிலையில், அவர்களில் 20,95,467 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது தேர்ச்சி அடைந்தோர் விகிதம் 93.60%ஆக உள்ளது.
பிராந்தியம் வாரியாக: பிராந்தியம் வாரியாக பார்க்கும் போது திருவனந்தபுரத்தில் அதிகபட்சமாக 99.75% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து விஜயவாடாவில் 99.60% பேரும், சென்னையில் 99.30% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், பெங்களூர் 99.26%, அஜ்மர் 97.10%. புனே 96.46%, கிழக்கு டெல்லி- 95.45%, மேற்கு டெல்லி 94.18% தேர்ச்சி விகிதம் இருக்கிறது.
மேலும், சத்தீஸ்கர் 94.14%, புபனேஷ்வர் 92.03%, டேராடூரன் 90.97%, போபால் 90.58%, நொய்டா 90.46% தேர்ச்சி விகிதமாக இருக்கிறது. இதில் 77.94% உடன் கவுஹாத்தி கடைசி இடத்தில் இருக்கிறது.
பள்ளி வாரியாக: 10ஆம் வகுப்பில் ஜவஹர் நவோதயா வித்தியாலயா மற்றும் கேந்திரிய வித்தியாலயா ஆகியவை ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதத்தில் தலா 99.09% பெற்று முதலிடத்தில் வருகிறது. தொடர்ந்து தனியார் பள்ளிகள் 94.54% பெற்றுள்ள நிலையில், சிடிஎஸ்ஏ பள்ளிகள் 94.40%, அரசு பள்ளிகள் அரசு: 86.72% மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் 83.95% பெற்றுள்ளன.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications