சிபிஎஸ்இ 10 & 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை வெளியானது! எந்த நாளில் எந்த தேர்வு? முழு விவரம்!
டெல்லி: சிபிஎஸ்இ பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியாகியுள்ளது.
பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதி குறித்த அறிவிப்பை மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் சிபிஎஸ்இ வாரியம் வெளியிட்டுள்ளது. முன்கூட்டியே சி.பி.எஸ்.இ வாரியம் அறிவித்தபடி, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கப்படுகின்றன. அதன்படி, நடப்பு கல்வியாண்டுக்கான சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி மார்ச் 13ஆம் தேதி நிறைவடைகிறது.

அதேபோல, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 2ஆம் தேதி நிறைவடைகிறது. ஜேஇஇ உள்ளிட்ட தேர்வுகளை கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ தேர்வு அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு இறுதித் தேர்வுகள் பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி, சுமார் 55 நாட்களுக்கு நடைபெறும்.

காலை 10:30 முதல் மதியம் 1:30 மணி வரை தேர்வுகள் நடத்தப்படும். 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்விற்கான அட்டவணையை cbse.nic.in அல்லது cbse.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ செய்முறைத் தேர்வு தேதிகளும் வெளியிடப்பட்டுள்ளன. ஜனவரி 1 ஆம் தேதி செய்முறைத் தேர்வுகள் தொடங்குகின்றன. அதேசமயம், குளிர் மிகுந்த பகுதிகளில் பள்ளிகளுக்கான பிராக்டிக்கல் தேர்வுகள் நவம்பர் 14 ஆம் தேதி தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டில், CBSE தேர்வு அட்டவணை டிசம்பர் கடைசி வாரத்தில் வெளியிடப்பட்டன. பொதுத் தேர்வுகள் பிப்ரவரி 15 அன்று தொடங்கி, 10 ஆம் வகுப்பு இறுதித் தேர்வுகள் மார்ச் 21 ஆம் தேதியும், 12 ஆம் வகுப்புத் தேர்வுகள் ஏப்ரல் 5 ஆம் தேதியும் முடிவடைந்தன.


-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications