சிபிஎஸ்இ 10, பிளஸ் 2 பொதுதேர்வு தேதி அறிவிப்பு.. 2025 பிப்ரவரி 15ல் தொடங்கும் தேர்வுகள்.. விபரம்
டெல்லி: சிபிஎஸ்இ 10 மற்றும் பிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 2025 பிப்ரவரி 15ம் தேதி தொடங்கி மார்ச் 18 வரை நடைபெறுகிறது.
மத்திய அரசின் பாடத்திட்டத்தின் கீழ் சிபிஎஸ்இ பள்ளிகள் செயல்பட்டு வரும் நிலையில் 2025ம் ஆண்டுக்கான 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சிபிஎஸ்இ 10 மற்றும் பிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு என்பது 2025 பிப்ரவரி மாதம் 15ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது.
10ம் வகுப்பு தேர்வை பொறுத்தமட்டில் 2025 பிப்ரவரி 15ம் தேதி ஆங்கிலம், பிப்ரவரி 20ல் அறிவியல் தேர்வுகள் நடக்கிறது. பிப்ரவரி மாதம் 27 ம் தேதி தமிழ் உள்ளிட்ட மொழிப்பாட தேர்வுகளும், மார்ச் 10ம் தேதி கணிதம், மார்ச் 13ம் தேதி ஹோம் சயின்ஸ் தேர்வுகள் நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வை பொறுத்தமட்டில் பிப்ரவரி 15ம் தேதி தொழிற்கல்வி பாட ( entrepreneurship exam)தேர்வு நடைபெற உள்ளது. பிப்ரவரி 21ல் இயற்பியல், 24ம் தேதி புவியியல், 27 வேதியியல் தேர்வுகள் நடக்க உள்ளது. மேலும் கூடுதல் விபரங்களை மாணவ-மாணவிகள் www.cbse.gov.in இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.
இந்த ஆண்டு சிபிஎஸ்இ 10 மற்றும் பிளஸ் 2 தேர்வை நாடு முழுவதும் மொத்தமாக சுமார் 44 லட்சம் பேர் எழுத உள்ளனர். இந்த தேர்வுகள் என்பதும் தேர்வு தேதியில் காலையில் நடக்கும். பெரும்பலான தேர்வுகள் காலை 10.30 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மணி வரை நடக்கும். சில தேர்வுகள் காலை 10.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணி வரை நடைபெற உள்ளது.
-
CBSE ஓஎஸ்எம் போர்ட்டல் ஹேக்கிங் சர்ச்சை: சோதனைத் தளம் மட்டுமே பாதிக்கப்பட்டது.. சிபிஎஸ்இ விளக்கம் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications