CBSE Plus 2 results விரைவில் வெளியீடு! ரிசல்ட் பார்க்க இன்டர்நெட் வசதியில்லையா?கவலை வேண்டாம்!
டெல்லி: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) நடத்திய 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இந்த மாதத்தில் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஏற்கனவே 10-ஆம் வகுப்பு முடிவுகள் ஏப்ரல் 15-ஆம் தேதியே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், 12-ஆம் வகுப்பு மாணவர்கள் தங்கள் எதிர்கால உயர்கல்வித் திட்டமிடலுக்காக முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

முடிவுகளைத் தெரிந்து கொள்வது எப்படி?
மாணவர்கள் கீழ்க்கண்ட இணையதளங்கள் மற்றும் செயலிகள் வாயிலாக தங்கள் மதிப்பெண்களைச் சரிபார்க்கலாம்:
இணையதளங்கள்:
cbseresults.nic.in
cbse.gov.in
results.cbse.nic.in
செயலிகள்: DigiLocker மற்றும் UMANG செயலிகள் மூலம் டிஜிட்டல் மதிப்பெண் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இன்டர்நெட் இல்லையா? கவலை வேண்டாம்! (IVRS சேவை)
இணைய வசதி குறைவாக உள்ள பகுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்காக, சிபிஎஸ்இ வாரியம் தானியங்கி குரல் வழி சேவை (IVRS) வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
டெல்லி வாசிகள்: 24300699
பிற பகுதியினர்: 011-24300699
இந்த எண்களைத் தொடர்பு கொண்டு, கேட்கப்படும் வழிமுறைகளைப் பின்பற்றி மாணவரின் ரோல் எண் (Roll Number) மற்றும் பள்ளி குறியீட்டை (School Code) உள்ளீடு செய்தால், பாடவாரியான மதிப்பெண்களைத் தொலைபேசி மூலமே அறியலாம்.
புதிய 'டிஜிட்டல்' மதிப்பீட்டு முறை:
இந்த ஆண்டு விடைத்தாள்களைத் திருத்துவதில் சிபிஎஸ்இ ஒரு முக்கிய மாற்றத்தைப் புகுத்தியுள்ளது. 'ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங்' (On-Screen Marking) என்ற முறையின்படி, விடைத்தாள்கள் ஸ்கேன் செய்யப்பட்டு கணினித் திரையிலேயே ஆசிரியர்களால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன.
இதற்காக ஆசிரியர்களுக்குப் பிப்ரவரி மாதமே சிறப்புப் பயிற்சிகளும் வழங்கப்பட்டன. இதன் மூலம் பிழைகள் குறைக்கப்பட்டு, துல்லியமான முடிவுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எப்போது வெளியாகும்?
கடந்த கால வரலாற்றைப் பார்க்கும்போது, மே மாதத்தின் இரண்டாம் வாரத்தில் முடிவுகள் வெளியாவது வழக்கம். கடந்த ஆண்டு மே 13 ஆம் தேதி வெளியானது. அதற்கு முந்தைய ஆண்டு மே 12 ஆம் தேதி வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டும் அதே காலக்கட்டத்தில் முடிவுகள் வெளியாக வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
முக்கிய அறிவுறுத்தல்: தேர்வு முடிவுகள் வெளியானதும் இணையதள நெரிசலைத் தவிர்க்கவும், பதற்றமின்றி முடிவுகளைப் பார்க்கவும், மாணவர்கள் தங்களது பதிவு எண் (Roll No) மற்றும் பள்ளி குறியீடு ஆகியவற்றை இப்போதே தயாராக வைத்துக் கொள்ளுமாறு வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications