"வெறும் 2 நிமிடங்களில் 15 லட்சம் சைபர் தாக்குதல்.." CBSE போர்ட்டலை மொத்தமாக முடக்க முயற்சி! பகீர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சிபிஎஸ்இ மறுமதிப்பீட்டு போர்டல் ஓபன் செய்யப்பட்ட முதல் நாளிலேயே, அந்தத் தளத்தைக் குறிவைத்து மிகப் பெரிய சைபர் தாக்குதல் நடந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வெறும் இரண்டு நிமிடங்களில் 15 லட்சம் சைபர் தாக்குதல் நடந்துள்ளது. இருப்பினும், அதையெல்லாம் தாண்டி தளம் ஆக்டிவாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் நாளிலேயே சுமார் 16,000+ மாணவர்கள் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்து இருக்கிறார்களாம்.

இந்த மே மாதம் இந்தியாவில் மாணவர்களுக்கு மிக மோசமான ஒரு காலம் போல இருக்கிறது. நீட் தேர்வு தொடங்கி தொடர்ச்சியாகப் பல்வேறு சிரமங்களை மாணவர்கள் எதிர்கொண்டு வருகிறார்கள். சிபிஎஸ்சி தேர்விலும் கூட ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங் முறையில் சில குழப்பங்கள் ஏற்பட்டன. இதற்கிடையே சிபிஎஸ்இ தளத்தின் மறுமதிப்பீட்டு போர்டல் இன்றைய தினம் திறக்கப்பட்டது.

CBSE Cyber attack CBSE cyber attack

ஹேக்கிங்

அந்த போர்டல் திறக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே, அந்தத் தளம் மீது தொடர்ச்சியான மற்றும் திட்டமிடப்பட்ட சைபர் தாக்குதல்கள் நடந்ததாக சிபிஎஸ்இ தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளது. போர்டலை முடக்க நினைத்த ஹேக்கர்கள், வெறும் 2 நிமிட இடைவெளியில் கிட்டத்தட்ட 15 லட்சம் ஹிட்ஸ்களை உருவாக்கி, தளத்தை முடக்கும் டினையல் ஆஃப் சர்வீஸ் தாக்குதலை நடத்த முயன்றனர்.

டேட்டாவை திருட முயற்சி

அதுமட்டுமன்றி, போர்டலில் உள்ள மாணவர்களின் முக்கிய டேட்டாவை சட்டவிரோதமாகத் திருடவும் முயன்றனர். இந்த தனிப்பட்ட தகவல்களைத் திருட சுமார் ஒரு லட்சம் முறை முயற்சி நடந்துள்ளன. இருப்பினும், இதை எல்லாம் சிபிஎஸ்இ தளத்தின் பாதுகாப்பு அமைப்பு துல்லியமாகக் கண்டறிந்து தடுத்து நிறுத்தியுள்ளது. இந்த அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும், சிபிஎஸ்இயின் தொழில்நுட்பக் குழுவினர் 24 மணி நேரமும் போர்டலைக் கண்காணித்து, எவ்விதத் தடையுமின்றி மாணவர்களின் விண்ணப்பங்களை பிராசஸ் செய்து சாதித்துள்ளனர். இவ்வளவு தாக்குதல் முயற்சிக்குப் பிறகும் கூட இந்த போர்டல் தற்போது ஒரே நேரத்தில் 8,000-க்கும் மேற்பட்ட யூசர்களை கையாளும் திறனுடன் செயல்பட்டு வருகிறது.

16,000 பேர்

மேலும், இதுவரை இந்த போர்ட்டல் மூலமாகச் சுமார் 16,000 பேர் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதிகபட்சமாக 20 சதவீதத்திற்கும் குறைவானவர்களே மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிப்பார்கள் என மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னதாகக் குறிப்பிட்டிருந்தார். அதாவது அதிகபட்சமாக 80,000 மாணவர்களே மறுமதிப்பீடு கோரி விண்ணப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், போர்டல் திறக்கப்பட்ட முதல் 10 மணி நேரத்திற்குள்ளேயே (செவ்வாய்க்கிழமை மாலை 3 மணி நிலவரப்படி) 16,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் குவிந்துவிட்டன. விண்ணப்பிக்க இன்னும் 3 நாட்களுக்கு மேல் அவகாசம் இருப்பதால், ஒட்டுமொத்தமாக விண்ணப்பித்தோர் எண்ணிக்கை 80,000 என்ற இலக்கைத் தாண்டி இமாலய உச்சத்தைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடரும் குளறுபடி

சமீபகாலமாக சிபிஎஸ்இயின் 'ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங்' எனப்படும் கணினி வழி விடைத்தாள் மதிப்பீட்டு முறையில் பல்வேறு தொழில்நுட்பக் கோளாறுகளும், முடிவுகள் வெளியாவதில் தாமதமும் ஏற்படுவதாக மாணவர்களும் மதிப்பீட்டாளர்களும் தொடர் புகார்களை அடுக்கிக் கொண்டே போனார்கள். இந்தப் புகார்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, மாணவர்களின் கருத்துக்களைக் கேட்டு போர்டலில் முக்கிய மாற்றங்களைச் சிபிஎஸ்இ கொண்டு வந்துள்ளது. மாணவர்கள் விண்ணப்பிக்கும் போது 'செஷன் டைம் அவுட்' ஆகி விண்ணப்பம் பாதியிலேயே ரத்தாவதைத் தடுக்க, செஷன் நேர வரம்புகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+