கைது செய்ய போராடும் பஞ்சாப் போலீஸ்..டெல்லியில் 'புது கெட் அப்'பில் ஹாயாக சுற்றும் அம்ரித்பால் சிங்
டெல்லி: பஞ்சாப் மாநில போலீசார் அம்ரித் பால் சிங்கை கைது செய்ய ஒருவாரத்திற்கும் மேலாக போராடி வரும் நிலையில், டெல்லியில் புது கெட்டப்புடன் ஹாயாக சுற்றும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி போலீசாருக்கு மேலும் தலைவலியை கொடுத்துள்ளது.
மறைந்த நடிகர் தீப் சித்துவால் உருவாக்கப்பட்ட அமைப்பு 'வாரிஸ் பஞ்சாப் டி' இந்த அமைப்பின் தலைவராக 2021 ஆம் ஆண்டு அம்ரித் பால் சிங் தலைமையேற்று நடத்தி வருகிறார்.
இவரது அடாவடி மற்றும் வன்முறை நடவடிக்கைகள் அந்த மாநில போலீசாருக்கு பெரும் தலைவலியாக மாறியது. குறிப்பாக கடந்த மாதம் அம்ரித் பால் சிங்கின் கூட்டாளி ஒருவரை போலீசார் பிடித்து வைத்திருந்தனர்.

வாள்கள், துப்பாக்கிகளுடன்..
குறிப்பாக கடந்த மாதத்தில் இந்த அம்ரித்பால் சிங்கின் கூட்டாளி ஒருவர், அமிர்தசரசில் உள்ள காவல் நிலையத்தில் போலீசரால் பிடித்து வைக்கப்பட்டு இருந்தார். அப்போது, அவரை மீட்க அம்ரித்பால் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பெரும் யுத்தத்திற்கு போவது போல கைகளில் வாள்கள், துப்பாக்கிகளுடன் காவல் நிலையத்திற்குள் புகுந்தனர். அப்போது பயங்கர வன்முறை ஏற்பட்டது. இந்த மோதலில் போலீஸ் உயர் அதிகாரி உள்பட 6 பேர் காயம் அடைந்தனர்.

போலீசாருக்கு கடும் நெருக்கடி
தொடர்ந்து நிலைமையை சமாளிக்க அம்ரித்பால் சிங் கூட்டாளியை காவல்துறை விடுவித்தது. இந்த விவகாரம் பஞ்சாப் மாநில போலீசாருக்கு கடும் நெருக்கடியை கொடுத்தது. இதனால் அம்ரித் பால் சிங்கை கைது செய்ய பஞ்சாப் காவல்துறை தக்க சமயம் பார்த்து கொண்டு இருந்தது. இந்த நிலையில், தான் கடந்த சனிக்கிழமை திடீரென அதிரடி நடவடிக்கையில் இறங்கிய பஞ்சாப் மாநில அரசு அம்ரித் பால்சிங்கை கைது செய்ய திட்டமிட்டது.

ஏமாற்றமே மிஞ்சியது
ஆனால் அவரது ஆதரவாளர்கள் 78 பேரை கைது செய்ய முடிந்ததே தவிர அம்ரித் பால் சிங்கை கைது செய்ய சென்ற போலீசாருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. போலீசார் பல இடங்களில் அம்ரித் பால் சிங்கை கைது செய்ய திட்டமிட்டு இருந்த போதும் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவானார். ஒருவாரத்திற்கும் மேலாக ஆயிரக்கணக்கான போலீசார் வலை வீசி தேடி வரும் நிலையில், தற்போது வரை அம்ரித் பால்சிங் கைது செய்ய முடியவில்லை.

இருப்பிடத்தை மாற்றிக்கொண்டு..
தற்போது பஞ்சாப் மாநிலத்தை விட்டு தப்பிய அம்ரித்பால் சிங் அடிக்கடி தனது இருப்பிடத்தை மாற்றி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பாக அரியானாவில் ஒரு வீட்டில் அம்ரித்பால் சிங் குடையை பிடித்த படி வெளியே சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகின. இதையடுத்து அரியானா சென்ற பஞ்சாப் போலீசாருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஒருவார காலமாக தொடர்ந்து பஞ்சாப் போலீசார், அம்ரித் பால்சிங்கை தேடிவரும் நிலையில், டெல்லியில் அவர் செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

புது கெட்டப்பில் அம்ரித் பால் சிங்..
யாரும் அடையாளம் கண்டுவிடாத படி டர்பன் இன்றி சன்கிளாஸ் மற்றும் மாஸ்க் அணிந்தபடி அம்ரித்பால் சிங் தனது உதவியாளர் பாபல்ப்ரித் சிங் உடன் செல்லும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. 21 ஆம் தேதி காட்சிகள் பதிவாகியுள்ளது. அரியானாவில் இருந்து குருகேஷத்ரா வழியாக அம்ரித் பால்சிங் டெல்லி வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது அம்ரித் பால் சிங் டெல்லியில்தான் பதுங்கியுள்ளரா? என்று தெரியவில்லை. இதற்கிடையே, நேபாளம் வழியாக போலி பாஸ்போர்ட் மூலம் அம்ரித் பால் சிங் தப்பலாம் என்பதால் கண்காணிப்பு பட்டியலில் வைக்குமாறு நேபாள போலீசாருக்கும் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்!












Click it and Unblock the Notifications