மாஸ்டர் மூவ்.. பங்கு சந்தையில் பலத்த அடி வாங்கிய துருக்கி நிறுவனம்! இந்தியா செக்
டெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு எதிராக இந்தியா மீது ட்ரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தியது. இந்த ட்ரோன்கள் அனைத்தும் மேட்-இன் துருக்கி. எனவே துருக்கி நிறுவனமான செலிபி ஏவியேஷனுக்கு இந்தியாவில் வழங்கப்பட்ட பாதுகாப்பு அனுமதியை மத்திய அரசு ரத்து செய்தது. இந்தியாவின் நடவடிக்கையை அடுத்து செலிபி நிறுவனத்தின் பங்குகள் சரிந்துள்ளன.
துருக்கி பங்கு சந்தையில் இன்று காலை நிலவரப்படி, செலிபி ஏவியேஷன் நிறுவனத்தின் பங்குகள் 10 சதவிகிதம் சரிந்துள்ளன.

இன்று காலை நிலவரப்படி, நிறுவனத்தின் பங்குகள் 222 புள்ளிகள் சரிந்திருக்கின்றன. இது நிறுவனத்தின் மொத்த பங்குகளில் 10 சதவிகிதமாகும். இந்தியாவில் உள்ள 9 விமான நிலையங்களில், தரையிறங்கும் விமானங்களை பார்க்கிங்குக்கு கொண்டு வருதல், பயணிகளின் உடமைகளை கையாளுதல் போன்ற பணிகளை செலிபி நிறுவனம் மேற்கொண்டிருந்தது. இப்படியான பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு செக்யூரிட்டி கிளியரன்ஸ் எனப்படும் பாதுகாப்பு அனுமதி வேண்டும்.
செலிபி நிறுவனத்திற்கு இதுபோன்று அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த அனுமதியை மத்திய அரசு நேற்று ரத்து செய்திருந்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுத்திருப்பதாக மத்திய அரசு விளக்கியிருந்தது. இதனை தொடர்ந்து தற்போது இந்நிறுவனத்தின் பங்குகள் சரிந்திருக்கின்றன.
மறுபுறம் மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தை நிறுவனம் நாடியிருக்கிறது. இந்த விகாரம் தொடர்பாக சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் முரளிதர் மொஹோல் கூறுகையில், "
செலிபி ஏர்போர்ட் சர்வீசஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்பது துருக்கியை சேர்ந்த நிறுவனமாகும். இது விமான நிலையங்களில் சேவைகளை வழங்கி வந்ததது. துருக்கி பாகிஸ்தானை வெளிப்படையாக ஆதரித்தது. இது தேசிய பாதுகாப்பு பிரச்சினையாக மாறியுள்ளது. தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, செலிபி தடை செய்யப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.
கடந்த 2022ம் ஆண்டு இந்நிறுவனத்திற்கு செக்யூரிட்டி கிளியரன்ஸ் வழங்கப்பட்டது. சென்னை, டெல்லி, பெங்களூரு மற்றும் கோவா உள்ளிட்ட விமான நிலையங்களில் இந்நிறுவனம் சேவையை வழங்கி வந்தது.
இந்தியா-பாகிஸ்தான் மோதலில் சர்வதேச நாடுகளின் நிலைப்பாடு தெரிய வந்தது. பாகிஸ்தானுக்கு துருக்கியும், அஜர்பைஜானும் அதரவளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications