அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ் வருது.. அதைவிடுங்க, அரசு ஊழியர்களுக்கான விருது விழா.. மத்திய அரசு மாஸ்
டெல்லி: அரசு ஊழியர்களுக்கு தனியார் நிறுவனங்களின் சார்பில் நடத்தப்படும் விருது மற்றும் பாராட்டு விழாக்கள் குறித்தான விதிமுறைகளை மத்திய பணியாளர் அமைச்சகம் இன்று வெளியிட்டிருக்கிறது.
ஓய்வூதியதாரர்களை போலவே, மத்திய அரசு ஊழியர்களும், அகவிலை உயர்வை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.. இதனிடையே, நிலுவையில் உள்ள அகவிலைப்படி பாக்கி தொகையை, ஊழியர்களின் கணக்கில் வரவு வைக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தெரிகிறது.. மேலும், ஃபிட்மென்ட் பேக்டரையும் மத்திய அரசு அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

தேர்தல்: விரைவில் எம்பி தேர்தல் வரவுள்ளது. பொதுவாக தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி தேர்தல் நடக்கவிருக்கும் மாநிலங்களில் தேர்தல் குறித்தான அறிவிப்பு வெளியிட்ட பிறகு, அரசு மக்களுக்கான எந்தவித நலத்திட்டங்களையும் அறிவிக்க கூடாது.
அதனால், நிலுவையில் உள்ள அகவிலைப்படி பாக்கியை ஊழியர்களுக்கு மத்திய அரசு முதலிலேயே தந்துவிடும் என்கிறார்கள். அந்தவகையில் ஜனவரி மாதம் இதுகுறித்த முறையான அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
உயர் பதவிகள்: உயர் பதவியில் உள்ள ஊழியர்களின் கணக்குகளில் 2 லட்சத்துக்கும் மேல், பணப்பலம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடன் ஃபிட்மெண்ட் பேக்டரை அதிகரிக்கவும் மத்திய அரசு ஆலோசித்து கொண்டிருக்கிறதாம். அனைத்து ஊழியர்களும் பயன்பெறும் வகையில் ஃபிட்மெண்ட் காரணியை 2.60 மடங்கிலிருந்து, 3.0 மடங்காக அதிகரிக்க வாய்ப்பிருப்பதால், அடிப்படை சம்பளமே, வேற லெவலுக்கு எகிறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பழைய ஃபார்முலாவின் அடிப்படையில் பார்த்தால், 8வது ஊதியக்குழுவின் ஃபிட்மென்ட் காரணியை கணக்கிடும்போது, 8வது ஊதியக் குழுவின் கீழ் அரசாங்கம் 2.57 மடங்கு ஃபிட்மென்ட் பேக்டரை வைத்தால், புதிய குறைந்தபட்ச ஊதியம் 18,000 x 2.57 = 46,260 ஆக இருக்கும். பணியாளர் அமைப்புகளில், ஃபிட்மென்ட் காரணி 3.68 மடங்கு இருந்தால், அது 18,000 ஆக இருக்கும். 18,000 x 3.68 = 66,240.
எதிர்பார்ப்பு: இப்போது ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் மாதம் ரூ.18,000 முதல் ரூ.56900 வரை உள்ள நிலையில், புதிய சம்பள கமிஷன் அமலுக்கு வந்தால், ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் உயரும் என்றும், இதனுடன், சம்பள கமிஷன் அறிக்கையில் ஃபிட்மென்ட் காரணியும் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இப்படியான கணிப்புகள் தினம் தினம் பரபரப்பை தந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில், அரசு ஊழியர்களுக்கான தனியார் விருது விழாக்கள் குறித்த புதிய விதிமுறைகளை, தற்போது மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. அரசு ஊழியர்களுக்கு தனியார் நிறுவனங்களின் சார்பில் நடத்தப்படும் விருது மற்றும் பாராட்டு விழாக்கள் குறித்தான விதிமுறைகளை மத்திய பணியாளர் அமைச்சகம் இன்று வெளியிட்டிருக்கிறது.
விதிமுறைகள்: அரசு வெளியிட்டுள்ள விதிமுறைகளின்படி, "அரசு ஊழியர்களுக்கு பண மதிப்பில் எந்தவித பரிசுகளும் வழங்கக்கூடாது. விருது விழா நடத்தும் நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு வழக்குகள் எதுவும் இருக்கக் கூடாது. விருது வழங்க தேர்வு செய்யப்பட்டுள்ள நபரின் சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள், முன் அனுமதியுடன் மட்டுமே விருதுகள் ஏற்றுக்கொள்ளப்படும்.
மத்திய சிவில் சர்வீஸ் நடத்தை விதிகளின்படி எந்தவொரு அரசு ஊழியரும் அரசின் முன் அனுமதி இல்லாமல் எந்த ஒரு பாராட்டு சான்றிதழ் அல்லது விருதுகளும் பெற்றுக் கொள்ளக் கூடாது. அவரது மரியாதைக்காக மற்றும் வேறு அரசு ஊழியரின் மரியாதைக்காக நடைபெறும் கூட்டங்களில் கலந்து கொள்ளக் கூடாது.
மத்திய அரசு: பொதுவாக பணியாளர் அமைச்சகத்தின் உத்தரவின்படி அரசு ஊழியர்களுக்கு தனியார் அமைப்புகள் மற்றும் நிறுவனங்களின் மூலம் விருதுகள் வழங்க வேண்டிய அவசியம் இல்லை.. அரசு தன்னுடைய ஊழியர்களை கவுரவித்துக் கொள்ளும். மத்திய பணியாளர் அமைச்சகம் வெளியிட்டு உள்ள இந்த புதிய வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்" என்று நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications