வந்தே பாரத் ரயிலில் இத்தனை சலுகைகளா.. இனி டூருக்கு ஜாலியா பறக்கலாமே! யார் யார் தெரியுமா?
டெல்லி: வந்தே பாரத் ரயில்களில் மிகப் பெரிய சலுகை காத்திருக்கிறது. இதை யார் பயன்படுத்தலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
வந்தே பாரத் எனும் இந்தியாவின் "புல்லட்" வேக ரயில்களை மக்கள் அதிகம் விரும்புகிறார்கள். தற்போது வந்தே பாரத் மெட்ரோ ரயில்களும் இயக்கப்படவுள்ளன. இதனால் பயண தூரமும், நேரமும் மிச்சமாகும் என்பதால் மக்கள் இதை நாடுகிறார்கள்.

வந்தே பாரத் ரயிலில் பாதுகாப்பு அம்சங்கள் அதிகம் இருக்கின்றன. தென் தமிழகத்தில் உள்ள பயணிகள் இந்த ரயில் சேவையால் தங்கள் நேரத்தை மிச்சப்படுத்துவதாக கூறுகிறார்கள். தற்போது சென்னை- கோவைக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது.
அது போல் விரைவில் சென்னை- நெல்லைக்கு இயக்கப்படுகிறது. இந்த ரயில்களில் பாதுகாப்பு அம்சங்கள், ஏசி வசதி என அத்தனை வசதிகள் இருந்தாலும் இதன் கட்டணம் என பார்க்கும் போது ஏழை, நடுத்தர மக்களுக்கு சற்று அதிகமான தொகையாக இருப்பதாக சொல்கிறார்கள்.
இந்த நிலையில் மத்திய நிதித் துறையின் தலைமையிலான செலவினத் துறை தற்போது ஒரு புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் அதிகாரப்பூர்வ பயணங்களுக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிக்கலாம். அது மட்டும் இல்லாமல் அந்த டிக்கெட்டுகளுக்கான தொகையை திரும்ப பெறும் சலுகையும் உள்ளது.
2017 ஆம் ஆண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு சுற்றுலா, பயிற்சி, இடமாற்றம் மற்றும் ஒய்வு பெறுவதற்கான சில தகுதிகளை மத்திய அரசு அறிவித்திருந்தது. அந்த சுற்றறிக்கையின் விதிகளுக்குள்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் பயணம் செய்ய வேண்டும்.
மத்திய அரசு ஏற்கெனவே அனுமதித்த பட்டியலில் ப்ரீமியம் ரயில்கள் ப்ரீமியம் தட்கல், சதாப்தி, ராஜ்தானி, தூரந்தோ, தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில்கள் உள்ளன. இந்த ரயில்களில் பயணிக்கும் போது முன்பதிவு மற்றும் பயணத்தின் போது கூடுதல் முன்னுரிமைகள் கிடைக்கும். அண்மையில் மத்திய அரசு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ் ரயில்களை இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
இனி மத்திய அரசு ஊழியர்கள் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ் ரயில்களில் சுற்றுலா, பயிற்சி, இடமாற்றம், ஓய்வு போன்றவைகளுக்காக பயணிக்கலாம். இதில் ஊழியர்கள் தங்கள் கேடரை பொருத்து பயணிக்கலாம். நிலை 5 அல்லது அதற்கு கீழ் உள்ள கிரேட்டில் உள்ள ஊழியர்கள் முதல் வகுப்பு அல்லது மூன்றாம் ஏசி அல்லது ஏசி நாற்காலி பெட்டியில் பயணிக்கலாம். அது போல் நிலை 6 முதல் 8 வரை உள்ளவர்கள் விமானத்தில் எக்கானமி கிளாஸில் அல்லது ரயில் என்றால் இரண்டாவது ஏசி பெட்டியில் பயணிக்கலாம். இப்படியாக நிலைகளின் அடிப்படையில் அவர்கள் பயணிக்கும் பெட்டிகள் மாறுபடும்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications