சண்டிகர் எங்களுக்குத்தான்.. பாய்ந்து அடித்த பஞ்சாப்.. பதுங்கும் பாஜக
டெல்லி: பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் பல்வேறு வழியில் அதிகாரத்தை பயன்படுத்தி பல்வேறு வழியில் தொந்தரவுகளை கொடுப்பதை மத்திய பாஜக அரசு வாடிக்கையாக வைத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் சண்டிகர் யூனியன் பிரதேசம் நிர்வாகத்தில் குடியரசு தலைவருக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் அரசியலமைப்பு பிரிவு 240 கொண்டு வருவதற்கான மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு பஞ்சாப்பில் இருந்து கடுமையான எதிர்ப்புகள் எழுந்ததால், மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டு கடந்த 1966 ஆம் ஆண்டு ஹரியானா உருவாக்கப்பட்டது. ஹரியானா மற்றும் பஞ்சாப் ஆகிய இரண்டு மாநிலங்களின் பொதுவான தலைநகராக சண்டிகர் இருந்து வருகிறது. சண்டிகர் தங்களுக்கு தான் சொந்தம் என்று பஞ்சாப், ஹரியானா இருவரும் உரிமை கோரி வருகிறார்கள். இந்த பிரச்சனையை சரி செய்வதற்காக சண்டிகர் யூனியன் பிரேதசமாக உருவாக்கப்பட்டது.

சண்டிகரில் அரசியலமைப்பு பிரிவு 240
நிர்வாக ரீதியாக பஞ்சாப் மாநில ஆளுநரே சண்டிகரின் நிர்வாக அதிகாரியாக இருந்து வருகிறார். நாடாளுமன்ற குளிர்கால கூட்ட தொடர் வருகிற டிசம்பர் 1 ஆம் தேதி தொடங்குகிறது. அப்போது அரசியலமைப்பு பிரிவு 240 கீழ் சண்டிகரை கொண்டு வருவதற்கான மசோதாவை தாக்கல் செய்வதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு பஞ்சாப் மாநிலத்தில் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது.
இதன் மூலம் மற்ற யூனியன் பிரேதசங்களில் இருக்கும் நடைமுறையை போல, சண்டிகர் நிர்வாக அதிகாரியை நியமிக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்படும். பாஜக ஆட்சியில் இல்லாத பஞ்சாப்பில் அரசியல் ரீதியாக குழப்பங்களை ஏற்படுத்துவதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
கொந்தளித்த பஞ்சாப்
ஆம் ஆத்மி, காங்கிரஸ் மற்றும் பஞ்சாப் மாநில கட்சிகள் இந்த முடிவுக்கு கண்டனம் தெரிவித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், "சண்டிகரில் பஞ்சாப் மாநிலத்திற்கான உரிமையை பாஜக பறிக்கிறது. இது அரசியமைப்பு மீது நடத்தப்படும் தாக்குதல்." என்றார். "சண்டிகர் பஞ்சாப்புக்கு சொந்தமானது." என்ற குரல் அதிகரித்து கொண்டிருக்கிறது.
இதனால் மத்திய உள்துறை அமைச்சர் அதைப்பற்றி விளக்கம் அளித்துள்ளது. அந்த விளக்கத்தில், "சண்டிகரில் சட்டத்தை எளிமையாக இயற்றும் திட்டம் பரிசீலனையில் உள்ளது. தற்போதுவரை அதில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் பாரம்பர்ய நிர்வாக கட்டமைப்பை மாற்றும் நோக்கம் மத்திய அரசுக்கு இல்லை.
மத்திய அரசு விளக்கம்
வருகிற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் இதைப்பற்றி எந்த முடிவும் எடுக்கப்படாது. சண்டிகரின் நலனை கருத்தில் எடுத்து அனைத்து தரப்பில் ஆலோசனை செய்த பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும். எனவே இதைப்பற்றி கவலைப்பட தேவையில்லை." என்று கூறியுள்ளனர். இதனால் பஞ்சாப்பில் சற்றே நிம்மதி பெரு மூச்சு விட்டுள்ளனர். "இருப்பினும் அந்த முடிவை முழுமையாக கைவிட வேண்டும்." என்று வலியுறுத்தியுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications