டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாளை இரவு 9 மணிக்கு இங்கெல்லாம் விளக்கு அணைக்க தேவையில்லை.. மத்திய அரசு விளக்கம்

Google Oneindia Tamil News

டெல்லி: நாளை இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் எங்கெல்லாம் விளக்குகளை அணைக்கத் தேவையில்லை என்பது குறித்து மத்திய எரிசக்தி துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

Recommended Video

    விளக்கு ஏற்றுவதன் பின்னணியில் அறிவியல் காரணம் இல்லை

    நாடு முழுவதும் கொரோனா பாதிப்பை அடுத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 21 நாட்கள் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் 10ஆவது நாளான நேற்று காலை பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுடன் உரையாற்றினார்.

    Central government explains about switching off lights tomorrow night

    அப்போது அவர் கூறுகையில் நாளை இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் அனைத்து விளக்குகளையும் அணைத்து வைக்க வேண்டும். அதற்கு பதிலாக மெழுகுவர்த்தி, அகல் தீபம் ஏற்றி வைக்கலாம். செல்போன், டார்ச்லைட்டுகளில் வெளிச்சம் ஏற்படுத்துங்கள் என மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

    இந்த நிலையில் இந்த விளக்குகளை அணைப்பது குறித்து மோடி கூறியதும் மருத்துவமனைகளில் விளக்குகளை அணைத்தால் எப்படியிருக்கும்? என்னாது 9 மணிக்கு 9 நிமிடம் மின்தடையா என்பது போல் கேள்விகளை கேட்டனர்.

    விளக்கேத்தினா.. கொரோனா செத்து போய்ரும்.. ஐஐடி பெயரை சொல்லி வதந்தி.. நம்பாதீங்க.. அது பொய்!விளக்கேத்தினா.. கொரோனா செத்து போய்ரும்.. ஐஐடி பெயரை சொல்லி வதந்தி.. நம்பாதீங்க.. அது பொய்!

    இதையடுத்து விளக்குகளை அணைப்பது குறித்து மத்திய அரசு தற்போது விளக்கம் அளித்துள்ளது. அதன் படி தெருவிளக்குகளை அணைக்க தேவையில்லை. மருத்துவமனை, காவல் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் விளக்குகளை அணைக்க தேவையில்லை. அது போல் அத்தியாவசிய தேவைகளுக்கான இடத்தில் விளக்குகளை அணைக்க வேண்டாம் என விளக்கியுள்ளது.

    English summary
    Central government explains about switching off lights tomorrow night. It asked to dont switch off lights in hospitals.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X