மத்திய அரசு துக்ளக் தர்பார்... ஆக்சிஜன் விநியோகத்தில் குளறுபடி - ப.சிதம்பரம் பொளேர்

தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூரில் கிடைக்கும் ஆக்சிஜன் தெலங்கானாவுக்கு அனுப்பப்படுவதாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளார். துக்ளக் தர்பார் நடைபெறுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அரசு துக்ளக் தர்பார் நடத்துவதாக . தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூரில் கிடைக்கும் ஆக்சிஜன் தெலங்கானாவுக்கு அனுப்பப்படுகிறது. தமிழகத்துக்கு கர்நாடக மாநிலம் பெல்லாரி மற்றும் ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் இருந்து ஆக்சிஜன் அனுப்பப்படுகிறது.

நாடு முழுவதும் கொரோனாவிற்கு தினசரியும் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தினசரியும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். நாட்டின் தலைநகர் டெல்லியில் இருந்து மும்பை, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் கொத்து கொத்தாக கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

Central government has sunk to the level of a Tughlak durbar says P. Chidambaram

கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் தேவை அதிகரித்து வருகிறது. பல தொழிற்சாலைகளில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. மத்திய அரசு பல மாநிலங்களுக்கு ஆக்சிஜனை பகிர்ந்து அளித்து வருகிறது. சென்னையில் இருந்து அண்டை மாநிலங்களான தெலுங்கானா, ஆந்திராவிற்கு ஆக்சிஜன் அனுப்பப்பட்டு வருகிறது.

உலகம் முழுவதிலும் இருந்தும் பல நாடுகள் இந்தியாவிற்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன. மருந்துகள், ஆக்சிஜன் சிலிண்டர்களை விமானங்கள் மூலம் அனுப்பி வருகின்றன. கொரோனா இரண்டாவது அலை இந்த அளவிற்கு தீவிரமடையக் காரணம் மோடிதான் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலையில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம், மத்திய அரசு துக்ளக் தர்பார் நடத்துவதாக கிண்டலடித்துள்ளார்.

Central government has sunk to the level of a Tughlak durbar says P. Chidambaram

அவர் தனது ட்விட்டர் பதிவில், தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூரில் கிடைக்கும் ஆக்சிஜன் தெலங்கானாவுக்கு அனுப்பப்படுகிறது. தமிழகத்துக்கு கர்நாடக மாநிலம் பெல்லாரி மற்றும் ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் இருந்து ஆக்சிஜன் அனுப்பப்படுவதாக தெரிவித்துள்ளார்.

Central government has sunk to the level of a Tughlak durbar says P. Chidambaram

அனைவருக்கும் புத்தி கெட்டுப்போய்விட்டதா? 'தேர்வுமுறை' என்ற ஒரு கருத்தை அவர்கள் கேள்விப்பட்டிருக்கவில்லையா? மத்திய கட்டுப்பாடு மீது இருக்கும் வெறியை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். மாநிலங்கள் தங்களது சொந்த ஆக்சிஜனை திறம்பட பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றும் ப. சிதம்பரம் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+