சுங்கச்சாவடிகளில் சூப்பர் திட்டம்.. மாஸ்டர் பிளானில் மத்திய அரசு.. வாகன ஓட்டிகளுக்கு ஹேப்பி நியூஸ்
டெல்லி: வாகனங்கள் பயணித்த தூர அடிப்படையில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் , தடையில்லாத சுங்க வசூல் முறையை அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதால், 30 வினாடி கூட சுங்கக்சாவடியில் மக்கள் காத்திருக்க வேண்டிய நிலை வராது என்றும் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை இணையமைச்சர் விகே சிங் தெரிவித்தார்.
நாடு முழுவதும் முக்கியமான அனைத்து தேசிய நெடுஞ்சலைகளிலும் சுங்கச்சவாடிகள் அமைத்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒவ்வொரு 40 முதல் 50 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஏராளமான சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பதை தடுக்க பாஸ்டேக் முறை அறிமுகம் செய்யப்பட்டது.

இப்போது பாஸ்டேக் இல்லாத வாகனங்களேஇல்லை. பாஸ்டேக்கிற்கு ரீசார்ஜ் செய்து வாகனங்கள் சுங்கச்சாவடிகளை கடந்து வருகின்றன. இந்நிலையில சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கும் முறையில் சில மாற்றங்களைகொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணையமைச்சர் வி.கே.சிங் டெல்லியில் இதுபற்றி செய்தியாளர்களிடம் கூறுகையில், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டோல்கேட்களில் 'பாஸ்ட்டேக்' முறை அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, வாகனங்கள் காத்திருக்கும் நேரம் சராசரியாக 47 வினாடிகளாக குறைந்துள்ளது. அதை 30 வினாடிகளுக்கு கீழே குறைக்க திட்டமிட்டுள்ளோம்.
அதற்காக மத்திய அரசு தடையில்லாத சுங்க வசூல் முறையை அமல்படுத்த ஆலோசித்து வருகிறது. இதன் காரணமாக, வாகன ஓட்டிகள் சுங்கச்சாவடிகளில் அரை நிமிடம்கூட காத்திருக்கும் நிலை ஏற்படாது. தடையில்லாத சுங்க வசூல்முறை இப்போது டெல்லி-மீரட் எக்ஸ்பிரஸ் சாலையில் சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது என்றார்.
இதுபற்றி விரிவாக விவரித்த அமைச்சர் விகே சிங், , செயற்கைகோள் மற்றும் கேமரா அடிப்படையில் தடையில்லா சுங்க வசூல்முறை செயல்படுத்தப்ட உள்ளது. இதன்படி உங்கள் வாகனம், ஒரு நெடுஞ்சாலையில் நுழைந்ததுமே அதன் பதிவெண், அங்குள்ள கேமராவால் 'ஸ்கேன்' செய்து தகல்களை தொகுத்துவிடும்.
அதன் பின்னர் உங்கள் வாகனம் எத்தனை கி.மீ. பயணித்துள்ளதோ, அந்த தூரத்துக்கு மட்டும் சுங்க கட்டணம் வசூலிக்கப்படும். இந்த புதிய முறையால், சுங்க கட்டண வசூல் திறன் மிகவும் அதிகரிக்கும், வாகனங்களின் பயண நேரம் குறையும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
டெல்லி-மீரட் எக்ஸ்பிரஸ் சாலையில் சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்டு இந்த புதிய நடைமுறை அங்கு வெற்றியடைந்தால், விரைவில் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும். மத்திய அரசு தொலைத்தொடர்பு துறையில் ஏற்பத்திய கட்டமைப்பு வளர்ச்சியின் காரணமாகவே இப்படியான நவீன முறைகளை செயல்படுத்த முடிகிறது" என்றார்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications