நாடாளுமன்ற கூட்டத்தொடர்.. இது லிஸ்ட்லயே இல்லையே.. நாங்க ரெடி.. அதிரடியாக இறங்கி வந்த மத்திய அரசு!
டெல்லி: நாளை தொடங்கும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் மணிப்பூரில் நடந்த வன்முறை உள்பட பல்வேறு பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது. அனைத்து கட்சி கூட்டத்தில் பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி இந்த விஷயத்தை தெரிவித்தார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடர்பாக டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டம் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் நடந்தது.

நாளை முதல் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிய அம்சங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. எதிர்க் கட்சிகளின் முக்கிய கோரிக்கைகள் உள்ளிட்டவை குறித்து விவாதிப்பது குறித்து அனைத்துக்கட்சி கூட்டத்தில் பேசப்பட்டது.
இந்த கூட்டத்தில் திமுக சார்பில் அக்கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, அதிமுக சார்பில் தம்பிதுரை எம்.பி. உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிலையில் நாளை தொடங்கும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், விதிகளின் கீழ் அனுமதிக்கப்பட்ட , அங்கீகரிக்கப்பட்ட ஒவ்வொரு பிரச்சினையையும் விவாதிக்கத் தயாராக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது. நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி இந்த தகவலை தெரிவித்தார். இந்தக் கூட்டத்தொடரில் 32 மசோதாக்கள் கொண்டுவரப்பட உள்ளதாகவும் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்தார்.
மேலும் மணிப்பூரில் நடந்த வன்முறை குறித்து விவாதிக்கவும் மத்திய அரசு தயாராக இருப்பதாக அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்தார்.
கடந்த முறை நடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அதானி விவகாரத்தை எழுப்பிய காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். பதிலுககு ராகுல் காந்தி அமெரிக்காவில் பேசிய விவகாரத்தை கையிலெடுத்து கொண்டு பாஜகவும் கடும் அமளியில் ஈடுபட்டது. இதனால் அடுத்தடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டன. அவை கடந்த முறை சரியாகவே செயல்படவில்லை.மக்களின் வரிப்பணம் தான் வீணானது. அரசும் எந்த விஷயங்கள் குறித்து விவாதிக்கவில்லை.
இந்நிலையில் அண்மையில் தான் 2024 லோக்சபா தேர்தலை ஒட்டி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பெங்களூருவில் கூடி பாஜகவை எதிர்க்க திட்டம் தீட்டின. இதேபோல் ஆளும் பாஜக தலைமையிலான கூட்டணியும் டெல்லியில் தீவிரமாக திட்டம் தீட்டின. இவர்கள் என்ன செய்ய போகிறார்கள் என்பது இந்த மழைக்கால கூட்டத்தொடரில் தெரியவரும்.
ஆளும் கட்சிக்கு நெருக்கடி தர எதிர்க்கட்சிகள் மணிப்பூர் கலவரம், தக்காளி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, மத்திய புலனாய்வு அமைப்புகளை ஏவி அச்சுறுதல் போன்றவை குறித்து விவாதிக்க முடிவு செய்துள்ளன. இதேபோல் டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் மசோதாவையும் எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்க்கின்றன.
ஆளும் பாஜகவை பொறுத்தவரை டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையிலான சட்டத்திருத்த மசோதா,வரி சேகரிப்பு மசோதா, ஐ.எம்.எஃப் மற்றும் வங்கி மசோதா, டிஜிட்டல் தரவுகளை பாதுகாக்கும் வகையிலான மசோதா, தபால் சேவை மசோதா, ஜன் விஸ்வாஸ் மசோதா, மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் தொடர்பான மசோதா, பழங்கால நினைவு சின்னங்கள், அகழ்வாராய்ச்சி பகுதிகளை பாதுகாக்கும் மசோதா போன்றவற்றை நிறைவேற்ற விரும்புகிறது.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications