அயோத்தி கோயிலுக்கு அடுத்து.. தனுஷ்கோடி இலங்கையை இணைக்கும் புது கடல் பாலம்.. மத்திய அரசு திட்டம்?
டெல்லி: இன்று அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் நிலையில், தனுஷ்கோடியையும் இலங்கையையும் இணைக்கும் கடல் பாலம் அமைக்கும் திட்டம் குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
அயோத்தியில் இப்போது ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. அங்கே ராமர் சிலை பிரதிஷ்டை விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி ராமர் சிலைக்குச் சிறப்புப் பூஜைகள் செய்தார். இதில் மேலும் பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

ராமர் பிறந்ததாக நம்பப்படும் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள இந்த ராமர் கோயிலில் குழந்தை வடிவில் ராமர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.இந்த ராமர் கோயில் திறப்பு விழா இன்றும் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
ராமர் கோயில்: இந்தச் சூழலில் இந்தியாவின் தனுஷ்கோடியை இலங்கையுடன் இணைக்கும் கடல் பாலம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு விரைவுபடுத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ராமர் தனது ராணுவத்தை இலங்கைக்கு அழைத்துச் செல்ல இந்த தனுஷ்கோடியில் இருந்து தான் ஹனுமானுக்கு உத்தரவிட்டு இருந்தார். இந்த தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னார் வரை பாலம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
23 கிமீ நீளமுள்ள பாலம் கட்டுவதற்கான சாத்தியக்கூறு ஆய்வை மத்திய அரசு விரைவில் மேற்கொள்ள உள்ளதாகப் பிரபல ஆங்கில செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியா இலங்கை கடல் பாலம்: கடந்த ஜூலை மாதம் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க டெல்லி வந்திருந்தார். அப்போது திருகோணமலை மற்றும் கொழும்பு துறைமுக பகுதிகளுக்கு இந்தியர்கள் எளிதாக வந்து செல்லும் வழிமுறைகளை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய இந்தியாவும் இலங்கையும் ஒப்புக்கொண்டன.
அதைத் தொடர்ந்து, மத்திய வெளியுறவு அமைச்சகம் இது தொடர்பாக மற்ற அமைச்சகங்கள் மற்றும் அரசு நிறுவனங்களுடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது. இந்த கடல் பாலத்திற்கான விரிவான திட்டத்தைத் தயாரிப்பதற்கு முன், பாலத்திற்கான சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொள்ள வெளியுறவுத் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
திட்டம் என்ன: இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் உள்ளவர்கள் கூறுகையில், "விக்கிரமசிங்கவின் பயணத்தின் போது இலங்கையில் நிலவும் பால், எண்ணெய், மின்சாரம் மற்றும் கப்பல் போக்குவரத்து பல சிக்கல்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. அதில் குறிப்பாக இரு நாடுகளையும் இணைக்கும் கடல் பாலம் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டன. ஆனால், இந்த நீண்ட கடல் பாலத்திற்கு பெரும் நிதி தேவைப்படும்,
நிதி அதிகம் தேவைப்படும் என்றாலும் கூட இந்தத் திட்டத்தால் இரு தரப்பும் மிகப் பெரியளவில் பலன் பெறும். இது இருதரப்பு வர்த்தகத்திற்கும் ஒரு வரமாகவே இருக்கும். ஆனால், இந்த இடத்தில் இரு நாடுகளையும் இணைக்கும் வகையிலான பாலத்தை அமைக்க முடியுமா என்பதைப் பார்க்க அரசு தொழில்நுட்ப, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் அம்சங்களை மதிப்பீடு செய்ய வேண்டும்" என்று அவர்கள் கூறுகின்றனர்.
10 ஆண்டுகள்: இரு நாடுகளைக் கடல் பாலம் மூலம் இணைக்க வேண்டும் என்பது குறித்துக் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகவே கோரிக்கை இருக்கிறது. கடந்த 2015 டிசம்பரில், மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி, இரு நாடுகளையும் இணைக்கும் வகையில்.. வாகனங்கள் மற்றும் ரயில் செல்லக் கூடிய பாலத்தைக் கட்டும் திட்டம் உள்ளதாக நிதின் கட்கரி கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications