டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"நம்பர் 1".. மோடியை இந்த உலகமே பாராட்டுது.. ஆனா இவங்க ஏன் இப்டி இருக்காங்க.. புலம்பி தள்ளிய அமைச்சர்

பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர் அஜய் பாட் பாராட்டு தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் மோடியின் பல செயல்களை இந்த உலகமே வியந்து போய் பாராட்டுது.. ஆனால் இந்த எதிர்க்கட்சிகள் ஏன் இப்படி இருக்காங்க? என்று பாஜக அமைச்சர் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அஜய் பாட், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு ஒரு பேட்டி தந்துள்ளார்.. அந்த பேட்டியில் அவர் சொன்ன முக்கியமான விஷயம் இதுதான்:

''பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அருமையாக செயல்பட்டு வருகிறது... ஒன்று தெளிவாக தெரிகிறது.. கடந்த காலத்தில் ஆட்சி செய்த அரசுகளின் குறைபாடுகளை எப்போதெல்லாம் மத்திய அரசு சரிசெய்கிறதோ, அப்போதெல்லாம் அது எதிர்க்கட்சிகளுக்கு பிடிப்பதில்லை.. அவைகளை விரும்புவதுமில்லை..

 ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற பி வி சிந்து.. பிரதமர் மோடி தொடங்கி பல்வேறு தலைவர்கள் வாழ்த்து ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற பி வி சிந்து.. பிரதமர் மோடி தொடங்கி பல்வேறு தலைவர்கள் வாழ்த்து

பிரச்சனை

பிரச்சனை

குறிப்பாக காஷ்மீருக்கான சிறப்பு அதிகாரம் ரத்து, 35ஏ பிரிவு ரத்து, குடியுரிமை திருத்த சட்டம் போன்றவைகள் எதிர்க்கட்சிகளுக்கு பிடிக்கவே இல்லை.. தீவிரவாதிகள் மீதான துல்லிய தாக்குதல், பாகிஸ்தான் ராணுவத்துடனான விமானப்படை தாக்குதலில் நமது ராணுவத்தினர் அளித்த பதிலடி போன்றவற்றில் குறைகள்தான் சொன்னார்கள்..

 மோடி

மோடி

இப்போகூட, பிரதமர் மோடி தலைமையிலான அரசு பல சாதனைகளை செய்து கொண்டுதானிருக்கிறது.. ஆனால், எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடியின் மீது ஏதாவது அவதூறு பரப்புவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.. பிரதமர் மோடியின் முடிவுகளையும், அரசின் கொள்கைகளையும் இந்த உலகமே போற்றுகிறது... ஆனால், இந்த நாட்டை சேர்ந்த எதிர்க்கட்சியினர் தேவையில்லாமல் அவர் மீது விமர்சனங்களை வைப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள்..

கட்சிகள்

கட்சிகள்

எதிர்க்கட்சிகளின் இதுபோன்ற நடத்தைக்கு பின்புலம் என்னவென்றே எனக்கு தெரியவில்லை.. எப்போதுமே குறை சொல்ல வேண்டும் என்ற மனநிலையில் அவர்கள் இருக்கிறார்கள்.. அதனால் தங்களின் கடமையிலிருந்தும் தவறுவதற்கு முயல்கிறார்கள்.

ஆதங்கம்

ஆதங்கம்

எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்கிறார்கள்.. பெகாசஸ் விவகாரம் தொடர்பாக அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள்... இதுபோன்று நடத்தை ஜனநாயகத்தின் நலனுக்கு உகந்தது அல்ல.... இப்படி அவையை செயல்படவிடாமல் செய்வது ஜனநாயகத்துக்கே துயரம்.. எந்த இடத்திலுமே நல்லது, கெட்டது இருக்கத்தான் செய்யும்... அதுக்காக இப்படி பொறுப்பற்ற முறையில் எதிர்க்கட்சிகள் செயல்படுவது சரியில்லை." என்று ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

ஆய்வு

ஆய்வு

சமீபத்தில், அமெரிக்காவில் ஒரு புகழ்பெற்ற புலனாய்வு நிறுவனம் "மார்னிங் கன்சல்ட்" உலக அளவில் யாரெல்லாம் செல்வாக்கு மிக்க தலைவர்கள், யாரெல்லாம் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்ற ஆய்வு நடத்தியிருந்தது. அந்த ஆய்வில் நம் பிரதமர் மோடி முதலிடத்தை பிடித்திருந்தார்.. உலகிலேயே மோடிதான் நம்பர் என்றது.. மேலும் கொரோனா ஒழிப்பில் இந்திய பிரதமர் சிறப்பாக செயல்பட்டதாக அமெரிக்காவும் பாராட்டு தெரிவித்திருநத்து குறிப்பிடத்தக்கது.

English summary
Minister Ajay Bhatt praises PM Modi and slams Opposition
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X