மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் காலமானார்!
டெல்லி: லோக் ஜனசக்தி தலைவரும், மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சருமான ராம்விலாஸ் பஸ்வான் காலமானதாக அவரது மகன் சிராக் பஸ்வான் அறிவித்துள்ளார். ராம்விலாஸ் பஸ்வான் வயது 74,

டெல்லி தனியார் மருத்துவமனையில் இவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருந்த நிலையில் காலமாகி இருக்கிறார்.
இவரது மகன் சிராக் பஸ்வான் ட்விட்டரில், ''பப்பா நீங்கள் தற்போது இந்த உலகத்தில் இல்லை. எப்போது எல்லாம் எனக்கு தேவையோ அப்போது எல்லாம் நீங்கள் என்னுடன் இருந்து இருக்கிறீர்கள். உங்களை மிஸ் செய்கிறேன் பப்பா'' என்று பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட்டில் தனது தந்தையின் புகைப்படத்தையும் இணைத்துள்ளார். ராம்விலாஸ் பஸ்வான் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்.

இவரது லோக் ஜனசக்தி கட்சி அந்த மாநிலத்தில் நடக்கும் சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த இவரது கட்சி இந்த முறை பிரிந்து வந்து தனியாக போட்டியிடுகிறது.
மேலும் சிராக் ட்விட்டரில் தனது இந்தி பதிவில், ''கடந்த சில நாட்களாக எனது தந்தை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தார். நேற்றிரவு திடீரென அவருக்கு உடலில் பாதிப்பு ஏற்பட்டு இருதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. தேவைபட்டால் மேலும் ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது இருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர். இதுவரைக்கும் என்னுடன் நீங்கள் இருந்ததற்கு நன்றி'' என்றும் பதிவிட்டுள்ளார்.

இவரது லோக் ஜனசக்தி கட்சி அந்த மாநிலத்தில் நடக்கும் சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த இவரது கட்சி இந்த முறை பிரிந்து வந்து தனியாக போட்டியிடுகிறது.
நாட்டில் கடந்த ஐம்பது ஆண்டுகளாக அரசியலில் இருந்து வருகிறார். நாட்டின் பெரிய அரசியல் தலைவர்களுடன் களம் கண்டவர், இவர் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications