"சர்ப்ரைஸ்".. 2வது பெண் குழந்தை பிறந்தால்.. ஏராளமான சலுகை.. மத்திய அரசு அதிரடி.. ஏப்ரல் 1 முதல் அமல்
மத்திய அரசு புது சலுகையை தாய்மார்களுக்கு அறிவித்துள்ளது
டெல்லி: இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தால், மேலும் சலுகைகளை அறிவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.. இதற்கான திட்டம் வருகிற ஏப்ரல் 1-ந்தேதி அமலாகிறது.
முதல் பிரசவத்தை எதிர்நோக்கும் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு "பிரதம மந்திரி மாத்ரு வந்தன யோஜனா" என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, 19 வயது அல்லது அதற்கு மேற்பட்ட பெண்கள் தங்கள் முதல் பிரசவத்துக்கு இத்திட்டத்தின் கீழ் கர்ப்ப காலத்தில் 5,000 ரூபாய் உதவித் தொகை, மருத்துவ வசதிகள், ஊட்டச்சத்து உணவு உள்ளிட்டவை மத்திய அரசால் அளிக்கப்படுகின்றன.

பெண் குழந்தை
குழந்தை பெற்றெடுத்த பாலூட்டும் தாய்மார்கள் இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகையை பெறலாம். இந்நிலையில், 2வது பிரசவத்தில் பெண் குழந்தை பெற்றெடுக்கும் அம்மாக்களுக்கும், இந்த சலுகைகளை வழங்க, கடந்த வருடம் பிப்ரவரி மாதம் மத்திய அரசு திட்டமிட்டது.. பெண் குழந்தை பிறப்பதை தவிர்க்கவும், பாலினத்தை அறியும் முயற்சியை கைவிடச் செய்யும் நோக்கில் இந்த சலுகை வழங்க திட்டமிட்டுள்ளதாக பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கடந்த வருடம் தெரிவித்திருந்தார்.

சலுகைககள்
இப்போது, 2-வதாக பெண் குழந்தை பிறந்தால் மத்திய அரசு திட்டத்தில் சலுகை- ஏப்ரல் 1-ந்தேதி அமலாகிறது என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.. தாய்மார்களுக்கான இந்த திட்டத்தில் மேலும் சலுகை வழங்கப்பட இருக்கிறது.. அதன்படி 2-வதாக பெண் குழந்தை பிறந்தால் அந்த தாய்மார்களுக்கும் இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்த சலுகையானது வருகிற ஏப்ரல் 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.

தாய்மார்கள்
கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு முதல் குழந்தைக்கான உதவித்தொகை 3 தவணைகளாக வழங்கப்படுகிறது... தற்போது திருத்தப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் செயல்முறை எளிமைபடுத்தப்பட்டு 2 தவணைகளாக பணம் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.. ஆனால், 2-வதாக பெண் குழந்தை பிறந்தால் முழுத்தொகையும் பயனாளிக்கு குழந்தை பிறந்த பின்னரே வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

வேலைக்கு போகும் பெண்கள்
தற்போதைய சூழலில், கர்ப்பிணிப் பெண்களின் பொருளாதார சூழ்நிலை காரணமாக தொடர்ந்து வேலைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது... மேலும், குழந்தை பெற்றெடுத்த பின்னரும், ஓய்வெடுக்க முடியாத நிலை உள்ளது. தினக்கூலி வேலை செய்யும் கர்ப்பிணி பெண்கள், பேருகாலத்தின் போது விடுமுறை எடுத்தால், அவர்களுக்கான ஊதியம் பிடிக்கப்படும். இதனை கருத்தில் கொண்டும், பெண்களின் உடல் நிலையை கருத்தில் கொண்டும் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது பெண்கள் இடத்தில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.
-
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்!












Click it and Unblock the Notifications