பாசுமதி அல்லாத பிற ரக அரிசி வகைகளை ஏற்றுமதி செய்ய விதித்த தடையை நீக்கியது மத்திய அரசு
டெல்லி: பாசுமதி அல்லாத பிற ரக அரிசி வகைகளை ஏற்றுமதி செய்ய விதிக்கப்பட்ட தடையை மத்திய அரசு நீக்கி உத்தரவிட்டுள்ளது. அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக குறிப்பிட அரிசிகளின் ஏற்றுமதிக்கு இந்திய அரசு தடைவிதித்திருந்தது.
உள்நாட்டில் அரிசி தேவையை பூர்த்தி செய்யவும் அரிசியின் சில்லறை விலையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்றும் பாசுமதி அல்லாத வெள்ளை அரிசியை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு கடந்த ஆண்டு ஜூலை 20ஆம் தேதி தடை விதித்திருந்தது.

எனினும் பாசுமதி அல்லாத அரிசி மற்றும் பாசுமதி அரிசியின் ஏற்றுமதி கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என மத்திய உணவு அமைச்சகம் தெளிவுப்படுத்தியிருந்தது. இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மொத்த அரிசியில் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி 25 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது. இந்த நிலையில்தான் இந்த அரிசிக்கு தடை அறிவிப்பு வெளியாகியிருந்தது.
இந்தியாவிலிருந்து பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியின் மொத்த ஏற்றுமதி 2022- 2023 ஆம் நிதியாண்டில் 4.2 மில்லியன் டாலராக இருந்தது. முந்தைய ஆண்டில் இது 2.62 மில்லியன் டாலராக இருந்தது. இந்தியாவின் பாஸ்மதி அல்லாத அரிசி தாய்லாந்து, இத்தாலி, ஸ்பெயின், இலங்கை மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.
உள்நாட்டு சந்தையில் பாசுமதி அல்லாத வெள்ளை அரிசி போதுமான அளவு கிடைப்பதை உறுதி செய்யவும் உள்ளூர் விலை உயர்வைக் குறைக்கவும் அரசாங்கம் ஏற்றுமதி கொள்கையை 20 சதவீத ஏற்றுமதி வரியுடன் இலவசம் என்பதில் இருந்து உடனடியாக அமலுக்கு வரும் வகையில் தடை என அரிசி ஏற்றுமதி கொள்ளையில் திருத்தியிருந்தது.
அரிசி ஏற்றுமதி 2022- 2023-ஆம் நிதியாண்டின் செப்டம்பர் - மார்ச் கால கட்டத்தில் 42.12 லட்சம் டன்னாக இருந்தது. இது முந்தைய நிதியாண்டின் செப்டம்பர் - மார்ச் காலகட்டத்தில் 33.66 லட்சம் டன்னாக இருந்தது. அரிசி ஏற்றுமதியில் 35 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் பாசுமதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கான தடையை மத்திய அரசு நீக்கி உத்தரவிட்டுள்ளது. இது உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இதன்படி புழுங்கல் அரிசிக்கான ஏற்றுமதி வரியை 20 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications