சி.ஏ.ஏ.வை வாபஸ் பெற்று பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்: லோக்சபாவில் மாயாவதி கட்சி எம்.பி
டெல்லி: சர்ச்சைக்குரிய சி.ஏ.ஏ.வை வாபஸ் பெற்று நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று லோக்சபாவில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. டானிஷ் அலி வலியுறுத்தினார்.
2019-ம் ஆண்டு மத்திய அரசு சி.ஏ.ஏ. எனப்படும் குடியுரிமை திருத்த சட்டத்தைக் கொண்டு வந்தது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து வரும் சீக்கியர்கள், பார்சிகள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்டோருக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்கிறது இந்த குடியுரிமை திருத்தச் சட்டம்.

சி.ஏ.ஏ. எதிர்ப்பு ஏன்?
ஆனால் இந்த நாடுகளில் இருந்து வரும் இஸ்லாமியர்கள் மட்டும் இந்திய குடியுரிமை பெற முடியாது என்கிற பிரிவினைக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. நாடு முழுவதும் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தன்னெழுச்சியான மக்கள் போராட்டங்கள் நடத்தப்பட்டன. டெல்லி ஷாகின் பாக் பகுதியில் முஸ்லிம் பெண்கள் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்றனர்.

வாபஸ் பெற கோரிக்கை
இத்தகைய போராட்டங்களுக்கு எதிராக பாஜக ஆதரவாளர்கள், வலதுசாரிகள் மோதலில் ஈடுபட்டனர். பின்னர் கொரோனா பரவல் அதிகரித்ததாலும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டதாலும் சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டங்கள் கைவிடப்பட்டன. இந்த நிலையில் அண்மையில் மத்திய அரசின் மூன்று விவசாய சட்டங்களை திரும்பப் பெறுவதாக அறிவித்த பிரதமர் மோடி விவசாயிகளிடம் மன்னிப்பும் கேட்டார். இதே பாணியில் சி.ஏ.ஏ.வையும் திரும்பப் பெற வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வருகிறது.

லோக்சபாவில் வலியுறுத்தல்
லோக்சபாவில் இன்று பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.பி. டானிஷ் அலி இது தொடர்பாக பேசினார். அவர் பேசுகையில், சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டங்களில் பங்கேற்றவர்கள் மீது ஏராளமான வழக்குகள் போடப்பட்டுள்ளன. ஊபா எனப்படும் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இச்சட்டத்தை பிரதமர் மோடி திரும்பப் பெற்று மன்னிப்பு கேட்க வேண்டும். அமைதிவழியில் போராடிய பொதுமக்கள் மீது தவறாக சட்டங்கள் பாய்ந்துள்ளன என்றார்.

ஆயுதப் படைச் சட்டத்துக்கும் எதிர்ப்பு
ஏற்கனவே நாகாலாந்தில் 14 நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களை ராணுவம் படுகொலை செய்த விவகாரத்தில் ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரம் தரும் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்கிற கோரிக்கை வடகிழக்கு மாநிலங்களில் வலுத்துள்ளது. நாகாலாந்து அமைச்சரவை இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆயுதப் படை சட்டத்துக்கு எதிராக மேகாலயா முதல்வரும் குரல் கொடுத்துள்ளார். மணிப்பூர் மாநில அமைச்சரவையும் இதேபோல் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications