டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜெர்மனியில் இருந்து 23 மொபைல் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் விமானம் மூலம் இந்தியாவுக்கு வருகிறது

Google Oneindia Tamil News

டெல்லி: ஜெர்மனியில் இருந்து 23 மொபைல் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் விமானம் மூலம் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட உள்ளது.

நாட்டில் கொரோனா பரவல் அதிவேகமாக இருந்து வருகிறது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பதால் நோயாளிகள் கொத்து கொத்தாக மரணிக்கும் நிலை உருவாகிவிட்டது.

Centre To Airlift 23 Mobile Oxygen Generation Plants From Germany

இதனால் ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்னொரு பக்கம் ஆக்சிஜன் உற்பத்தி நிறுவனங்கள் முழுவீச்சில் செயல்பட்டும் வருகின்றன.

'ஆக்சிஜன்'.. இந்தியாவுக்கோ அது 'வேதனை'.. அமெரிக்காவுக்கோ அது 'சாதனை''ஆக்சிஜன்'.. இந்தியாவுக்கோ அது 'வேதனை'.. அமெரிக்காவுக்கோ அது 'சாதனை'

இதன் அடுத்த கட்டமாக ஜெர்மனியில் இருந்து 23 மொபைல் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மொபைல் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் ஒரு நிமிடத்துக்கு 400 லிட்டர் என ஒரு மணிநேரத்துக்கு 2,400 லிட்டர் ஆக்சிஜனை உற்பத்தி செய்யுமாம்.

Centre To Airlift 23 Mobile Oxygen Generation Plants From Germany

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் பாரத் பூஷன் பாபு, இந்த மொபைல் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் பாதுகாப்பு படைக்கு சொந்தமான மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும். இதற்காக விமானப் படை விமானங்கள் தயார் நிலையில் உள்ளன என்றார்.

English summary
Defence Ministry has decided to airlift 23 mobile oxygen generating plants from Germany.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X