சென்னை அண்ணாசாலை ஸ்தம்பித்தது - ஏர்கலப்பையுடன் சாலையில் திரண்ட விவசாயிகள் கைது
தமிழகம், புதுச்சேரி உள்பட நாடு முழுவதும் சக்கா ஜாம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை: வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஏராளமான விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். சென்னை அண்ணாசாலையில் ஏராளமான விவசாயிகள் திரண்டதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. கடலூர், திருச்சி, ராஜபாளையம், விருதுநகரிலும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
வேளாண் சட்டங்களை திரும்ப பெற வழியுறுத்தி நாடு தழுவிய மறியல் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர். தமிழகத்தில் சென்னை தொடங்கி விருதுநகர் வரை முக்கிய சாலைகளில் விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர்.

திருச்சியில் அய்யாக்கண்ணு தலைமையில் சட்டை அணியாமல் கையில் ஏர்கலப்பையுடன் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைவரையும் காவல்துறையினர் காவல்துறையினர் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்தூரில் மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். கடலூர் ஜவான் பவன் சிக்னல் அருகே அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் முழக்கமிட்டனர். இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினர் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது!












Click it and Unblock the Notifications