தப்பினார் புஷ்கர் சிங் தாமி! இடைத்தேர்தலில் பெரும் வெற்றி.. உத்தரகண்ட் முதல்வர் பதவியை தக்க வைப்பு
டெல்லி: உத்தரகண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி போட்டியிட்ட சம்பாவத் தொகுதியின் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் உடன் உத்தரகண்ட் மாநிலத்திற்கும் கடந்த பிப். மாதம் தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலரும் கூட, உத்தரகண்ட்டில் பாஜகவுக்கு எதிரான மனநிலை உள்ளதாகவும் இந்த முறை தாங்கள் ஆட்சி அமைப்பது உறுதி என்றும் தொடர்ந்து கூறி வந்தனர்.

உத்தரண்ட் தேர்தல்
ஆனால், கடந்த மார்ச் மாதம் வெளியான தேர்தல் முடிவுகள் இதற்கு நேர்மாறாக அமைந்தது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் பாஜக 47 இடங்களில் வென்றது. இது கடந்த தேர்தல் உடன் ஒப்பிடுகையில் 10 இடங்கள் குறைவு என்றாலும் கூட ஆட்சி அமைக்க இது போதுமானதாக இருந்தது. தேர்தல் முடிவைப் பெரிதும் எதிர்பார்த்து இருந்த காங்கிரசுக்கு வழக்கம் போல ஏமாற்றமே மிஞ்சியது. அக்கட்சி வெறும் 19 இடங்களில் மட்டுமே வென்று இருந்தது.

தோல்வி
பாஜக என்ன தான் தனிப்பெரும்பான்மை உடன் வென்று ஆட்சியை அமைத்து இருந்தாலும் கூட, முதல்வராகத் தேர்தலில் களமிறங்கிய புஷ்கர் சிங் தாமி தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்து இருந்தார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட புவன் சந்திர கப்ரி சுமார் 7000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மாநில முதல்வரே தேர்தலில் தோல்வி அடைந்தது பாஜகவுக்குச் சங்கடத்தை ஏற்படுத்தியது.

இடைத்தேர்தல்
சட்டசபைத் தேர்தலில் புஷ்கர் சிங் தாமி தோல்வி அடைந்து இருந்ததால், அவருக்குப் பதிலாக வேறு ஒருவர் முதல்வராக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், பாஜக தலைமை முதல்வர் பதவிக்கு மீண்டும் புஷ்கர் சிங் தாமி பெயரையே டிக் அடித்தது. இருப்பினும், தேர்தலில் தோல்வி அடைந்து இருந்ததால், அடுத்த 6 மாதத்திற்குள் அவர் சட்டசபை உறுப்பினராகத் தேர்வாக வேண்டிய கட்டாயம் இருந்தது.

வெற்றி
இந்தச் சூழலில் சம்பாவத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் புஷ்கர் சிங் தாமி களமிறங்கினார். இதில் அவர் சுமார் 58,258 அல்லது 92.9 சதவீத வாக்குகளைப் பெற்ற நிலையில், காங்கிரஸின் நிர்மலா கெஹ்டோரி வெறும் 3,233 அல்லது 5.16 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றார். இதன் மூலம் உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, சுமார் 55025 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், பாஜக மீது நம்பிக்கை வைத்த வாக்காளர்களுக்கு நன்றி என்றும் அவர் ட்வீட் செய்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications