பாஜகவுக்கு ஆதரவு.. சபாநாயகர் பதவியை குறி வைக்கும் சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார்! காரணம் இதுதான்
டெல்லி: லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் ஆதரவுடன் பாஜக ஆட்சியைமைக்க தயாராகி வருகிறது. இதற்கு கைமாறாக சபாநாயகர் பதவியை கோர இருவரும் திட்டமிட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2019ம் ஆண்டை போல இந்த ஆண்டும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற்றிருக்கிறது. முதற்கட்டமாக 22 மாநிலங்களில் ஏப்ரல் 19ம் தேதியும், 88 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ம் தேதியும், 94 தொகுதிகளுக்கு மூன்றாம் கட்டமாக மே 7ம் தேதியும், 96 தொகுதிகளுக்கு 4ம் கட்டமாக மே 13ம் தேதியும், 5ம் கட்டமாக 49 தொகுதிகளுக்கு மே 20ம் தேதியும், 7 மாநிலங்களில், 58 தொகுதிகளில் மே 25ம் தேதி 6ம் கட்டமாகவும், ஜூன் 1ம் தேதி 7 மாநிலங்களில் 57 தொகுதிகளுக்கு 7வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நடந்து முடிந்தது.

இந்நிலையில் நேற்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த முறை மீண்டும் நரேந்திர மோடி பிரதமர் நாற்காலியில் அமர்வாரா? அல்லது இந்தியா கூட்டணி வலுவான போட்டி கொடுத்து ஆட்சியை கைப்பற்றுமா? என்கிற எதிர்பார்ப்புகள் தீவிரமடைந்தன. தொடக்கம் முதல் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கும், கடும் போட்டி நிலவியது.
இறுதியாக பாஜக கூட்டணி 293 தொகுதிகளிலும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234 தொகுதிகளையும் கைப்பற்றியது. பாஜகவை எடுத்துக்கொண்டால் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் உதவியின் ஆட்சியமைக்க முடியாது. இந்த இரண்டு கட்சிகளிடம் 17+16 என 33 தொகுதிகள் இருக்கின்றன. பாஜக கூட்டணியில் இதை கழித்துவிட்டால் 260 தொகுதிகள் மட்டுமே வரும். பெரும்பான்மை பெற 272 தொகுதிகளை வசப்படுத்தியிருக்க வேண்டும்.
எனவே சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமாரின் ஆதரவை பாஜக நம்பியிருக்கிறது. இதற்கு கைமாறாக தங்களுக்கு மக்களவை சபாநாயகர் பதவி வேண்டும் என்று இரு கட்சிகளும் கோர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சபாநாயகர் பதவியை கோருவதற்கு பின்னணியில் வலுவான காரணம் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது, தங்கள் மீது கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை பாய்வதை தடுக்க சபாநாயகர் பதவியை இக்கட்சிகள் கோருகின்றன. வரும் 5 ஆண்டுகளில் ஒரு வேளை காங்கிரசுக்கு ஆதரவளிக்க இந்த கட்சிகள் முயலும் பட்சத்தில் சபாநாயகர் இவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, தகுதி நீக்கம் செய்ய வாய்ப்பிருக்கிறது. ஆனால், சபாநாயகர் பதவி தங்களிடம் இருந்தால் இதற்கான வாய்ப்பு இருக்காது.
மட்டுமல்லாது சபாநாயகர் பதவி நாடாளுமன்றத்தில் அதிகாரமிக்க பதவி என்பதால் இதற்கான போட்டி தீவிரமடைந்திருக்கிறது. இன்று மாலை என்டிஏ கூட்டணி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது. இதில் சந்திரபாபு நாயுடுவும், நிதிஷ் குமாரும் பங்கேற்கிறார்கள். இக்கூட்டத்தில் சபாநாயகர் பதவி குறித்த தங்கள் கோரிக்கையை எழுப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications