டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

1.54 மணிக்கு நடந்த அந்த விஷயம்.. சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டர் மாயமானது எப்படி.. இதுதான் நடந்தது!

சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டர் உடன் எப்படி தொடர்பு துண்டிக்கப்பட்டது, கடைசி நிமிடங்களில் என்ன நடந்தது என்று இஸ்ரோ விளக்கி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    சந்திரயான் 2ல் உள்ள லேண்டர் விக்ரம் உடன் தொடர்பு துண்டிப்பு

    டெல்லி: சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டர் உடன் எப்படி தொடர்பு துண்டிக்கப்பட்டது, கடைசி நிமிடங்களில் என்ன நடந்தது என்று இஸ்ரோ விளக்கி உள்ளது.

    சந்திரயான் 2 நிலவில் இறங்கவில்லை.. நேற்று இரவு தூங்க சென்ற இந்தியர்களுக்கும், தூங்காமல் டிவி முன் இருந்தவர்களுக்கும் கிடைத்த அதிர்ச்சி தகவல் இதுதான்! ஆம் சந்திரயான் 2ல் இருக்கும் விக்ரம் லேண்டர் திட்டமிட்டபடி நிலவில் இறங்கவில்லை.

    மாறாக நிலவிற்கு அருகில் 2.1 கிமீ தூரம் வரை சென்ற சந்திரயான் 2 தொடர்பை இழந்துள்ளது. இஸ்ரோவின் இந்த சறுக்கல் உலகையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சந்திரயான் 2ல் நேற்று இரவு என்ன நடந்தது என்று ஒவ்வொரு படிநிலையாக பார்ப்போம்.

    எங்கு போனது விக்ரம்.. தேடிக் கண்டுபிடித்துத் தருமா சந்திரயான் ஆர்பிட்டர்?எங்கு போனது விக்ரம்.. தேடிக் கண்டுபிடித்துத் தருமா சந்திரயான் ஆர்பிட்டர்?

    நோக்கம்

    நோக்கம்

    சந்திரயான் 2ல் இருக்கும் விக்ரம் லேண்டரை நிலவில் மிகவும் மெதுவாக சாப்ட்லேண்டிங் செய்வதுதான் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும். சரியாக 1.39 மணிக்கு சந்திரயான் 2 நிலவை நோக்கி இறங்க தொடங்கியது. இதன் பயண நேரம் 15 நிமிடங்கள். அதனால் சந்திரயான் 2 நிலவில் 1.54க்கு இறங்கி இருக்க வேண்டும்.

    நிலவு

    நிலவு

    முதலில் சந்திரயான் 2 வேகமாக நிலவை நோக்கி இறக்கப்படும். 150 கிமீ தூரத்தில் இருந்து சந்திரயான் 2 வேகமாக நிலவை நோக்கி இறங்கியது. இதில் நான்கு எஞ்சின்கள் இருக்கும். எல்லா எஞ்சினும் மொத்தமாக இயக்கப்பட்டு வேகமாக சந்திரயான் 2 கீழே இறக்கப்பட்டது.

    4 எஞ்சின்

    4 எஞ்சின்

    சந்திரயான் 2 வேகமாக இறக்கப்பட்டாலும் 1 கிமீ தூரம் வந்த பின் மொத்தமாக நிறுத்தப்படும். அதன்பின் சந்திரயான் 2 மிக மிக மெதுவாக நிலவில் தரையிறங்கும். அதன்படி சரியாக 2.1 கிமீ தூரம் வரை சந்திரயான் 2 மிக சரியாக நிலவை நோக்கி இறங்கியது. அதன்பின் 1 கிமீ தூரத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் சறுக்கல்

    ஆனால் சறுக்கல்

    ஆனால் 2.1 கிமீ தூரத்திலேயே சந்திரயான் 2ன் சிக்னல் துண்டிக்கப்பட்டது. விக்ரம் லேண்டர் எங்கே இருக்கிறது. 1 கிமீ தூரத்தை அடைந்துவிட்டதா என்று பெரிய குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து விக்ரம் லேண்டர் உடன் மீண்டும் மீண்டும் தொடர்பை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

    மோடி என்ன

    மோடி என்ன

    அப்போதுதான் இஸ்ரோ வேகமாக செயல்பட்டு பிரதமர் மோடிக்கு விஷயங்களை அறிவித்தது. விக்ரம் லேண்டர் உடன் தொடர்பு ஏற்படுத்த முடியவில்லை என்று பிரதமர் மோடியிடம் விளக்கினார்கள். இன்னொரு பக்கம் இஸ்ரோவின் விஞ்ஞானிகள் குழு மீண்டும் விக்ரம் லேண்டர் உடன் தொடர்பை ஏற்படுத்த முயன்றனர்.

    விக்ரம் சொதப்பல்

    விக்ரம் சொதப்பல்

    ஆனால் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியாத காரணத்தால், ஆர்பிட்டர் உடன் இஸ்ரோ தொடர்பு கொண்டது. ஆர்பிட்டர் எப்போதும் போல இஸ்ரோவுடன் தொடர்பில் இருந்தது. ஆனால் ஆர்பிட்டருக்கும் விக்ரம் எங்கே சென்றது என்று தெரியவில்லை. சரியாக 1.54 மணிக்கு தொடர்பு துண்டிக்கப்பட்டது.

    டேட்டா ஆராய்ச்சி

    டேட்டா ஆராய்ச்சி

    இதையடுத்துதான் விக்ரம் லேண்டர் உடன் நாங்கள் தொடர்பை இழந்துவிட்டோம். இது தொடார்பான டேட்டாக்களை ஆராய்ச்சி செய்து வருகிறோம் என்று இஸ்ரோ தெரிவித்தது. விக்ரம் லேண்டர் என்ன ஆனது, நிலவில் இறங்கியதா? நிலவில் விழுந்து தோல்வி அடைந்ததா? சிக்கனலுக்காக காத்திருக்கிறதா என்று இன்னும் தெரியவில்லை.

    வாய்ப்பு

    வாய்ப்பு

    இஸ்ரோ இப்போதும் விக்ரம் உடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள தீவிரமாக முயன்று வருகிறது. விக்ரம் லேண்டர் உடன் இப்போதும் கூட தொடர்பை ஏற்படுத்த முடியும் என்று இஸ்ரோ கூறுகிறது. அதனால் இந்த திட்டம் இன்னும் முழுமையாக தோல்வி அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Chandrayaan 2: What happened to Vikram Lanade - Here’s What We Know so far about the signal lost.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X