நிலவில் "டிராபிக்" ரொம்பவே மோசம்! சின்ன தப்பு நடந்தாலும் அவ்வளவு தான்! அப்போ சந்திராயன்-3 என்ன ஆகும்
டெல்லி: நிலவைச் சுற்றி நடக்கும் ஆய்வுகள் இப்போது மீண்டும் தீவிரமடையத் தொடங்கியுள்ளது. இந்தியாவின் சந்திரயான் 3 இன்னும் சில நாட்களில் நிலவில் தரையிறங்க உள்ள நிலையில், வரும் காலத்தில் புதிய சாட்டிலைட்களும் நிலவுக்குச் செல்ல இருக்கிறது.
கடந்த ஜூலை மாதம் இந்தியாவில் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ சந்திரயான்-3 ராக்கெட்டை அனுப்பியது. வரிசையாக நாம் அனுப்பும் மூன்றாவது ராக்கெட் இதுவாகும்.

முதலில் பூமியைச் சுற்றிச் சென்று வந்த சந்திரயான் 3 ராக்கெட் சில வாரங்களுக்கு முன்பு, சந்திரனை நோக்கிய அதன் பயணத்தைத் தொடர்ந்தது. இப்போது சந்திரனைச் சுற்றிய அதன் சுற்றுப்பாதை தொடர்ந்து குறைந்து வருகிறது.
சந்திரயான் 3 மட்டும் இல்லை: அதேநேரம் இப்போது நிலவைச் சுற்றி நமது சந்திரயான் 3 மட்டும் இல்லை. கடந்த ஜூலை மாத நிலவரப்படி, நிலவைச் சுற்றிலும் மொத்தம் ஆறு சாட்டிலைட்கள் ஆக்டிவாக இருக்கிறது. வரும் நாட்களில் இதன் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கவே இருக்கிறது.
தற்போது நிலவைச் சுற்றிப் பார்த்தோம் என்றால், நாசாவின் லூனார் ரீகனைசென்ஸ் ஆர்பிட்டர் ஒன்று சுழன்று வருகிறது. அதேபோல மீண்டும் நிலவில் மனிதர்களை அழைத்துச் செல்லும் ஆர்டெமஸ் திட்டத்தின் கீழ் அனுப்பப்பட்ட மேலும் இரண்டு சாட்டிலைட்கள் உள்ளன. மேலும், இந்தியாவின் சந்திரயான்-2, கொரியாவின் பாத்ஃபைண்டர் லூனார் ஆர்பிட்டர், மற்றும் நாசாவின் கேப்ஸ்டோன் என மொத்தம் 6 சாட்டிலைட்கள் இப்போது நிலவைச் சுற்றி வந்து கொண்டிருக்கிறது.
எங்கே உள்ளன: கடந்த 2009ஆம் ஆண்டில் நாசா அனுப்பிய LRO என்ற சாட்டிலைட் இன்னும் செயல்பாட்டில் தான் உள்ளது. அது நிலவில் இருந்து 200 கிமீ உயரத்தில் சுற்றிவருகிறது. இது சந்திரனின் உயர் தெளிவு திறன் கொண்ட படங்களைத் தொடர்ச்சியாக எடுத்து வருகிறது. அதேபோல ஜூன் 2011இல் விண்ணில் செலுத்தப்பட்ட நாசாவின் ARTEMIS P1 மற்றும் P2 சாட்டிலைட்கள் சுமார் 100 கிமீ x 19,000 கிமீ உயரத்தில் நிலவைச் சுற்றி வருகிறது.
இதுபோக சந்திரயான் 2 விண்கலமும் ஆக்டிவாக இருக்கிறது. கடந்த 2019இல் அதில் இருந்த விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்க முயன்ற போது அது திடீரென தொடர்பை இழந்தது. இதனால் விக்ரம் லேண்டர் நிலவில் மோதியது. விக்ரம் லேண்டர் சொதப்பலாக இறங்கினாலும் கூட இன்னும் சந்திரயான் 2, சுமார் 100 கிமீ உயரத்தில் சுற்றியே வருகிறது.
புதிதாக வரும் சாட்டிலைட்கள்: இவை தவிர கொரியாவின் KPLO மற்றும் நாசாவின் கேப்ஸ்டோன் ஆகியவையும் நிலவைச் சுற்றி வருகிறது. ஆனால், இதோடு அங்குள்ள சாட்டிலைட்களின் எண்ணிக்கை நின்றுவிடுகிறது. சந்திரனை சுற்றிலும் இருக்கும் பாதை வரும் நாட்களில் மேலும் மேலும் பரபரப்பானதாக மாறப் போகிறது. வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரஷ்யா லூனா 25ஐ அனுப்புகிறது. அது வரும் ஆகஸ்ட் 16இல் நிலவின் சுற்றுப்பாதையில் நுழையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யா அனுப்பும் இந்த சாட்டிலைட்டும் சந்திரயான் 3 போல நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அனுப்பப்படுகிறது. இதன் மூலம் சுமார் 45 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரஷ்யாவின் சாட்டிலைட் நிலவில் தரையிறங்க உள்ளது. இது 100 கிமீ தொலைவில் நிலவைச் சுற்றி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை வரும் ஆகஸ்ட் 21 முதல் 23 வரையிலான காலகட்டத்தில் நிலவின் தென் துருவத்தில் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அலர்ட்: அதேபோல இந்தாண்டு இறுதியில் ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் கீழ் அமெரிக்கா மற்றொரு சாட்டிலைட்டை அனுப்ப உள்ளது. ஆளில்லாத சாட்டிலைட்டான இதுவும் நிலவைச் சுற்றி வட்டமடிக்கத் தொடங்கும். வரும் காலத்தில் மேலும் பல நாடுகளும் நிலவைச் சுற்றி தங்கள் சாட்டிலைட்களை அனுப்ப உள்ளது.
இதன் மூலம் மீண்டும் நிலவைச் சுற்றிய பாதை பரபரப்பாக உள்ளது. இப்படிப் பல சாட்டிலைட்கள் அனுப்பப்பட்டால் மோதல்களை தவிர்க்கத் தேவையான நடவடிக்கைகளை நாம் எடுக்க வேண்டும். இல்லையென்றால் அங்கே ராக்கெட்கள் மோதி மிக மோசமான விபத்து ஏற்படும் என்று ஆய்வாளர்கள் இப்போதே அலர்ட் கொடுக்கிறார்கள்.
-
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
வேளச்சேரி- பரங்கிமலை ரயில்.. மிகப்பெரிய சம்பவத்தை 'சைலண்ட்' ஆக செய்த மத்திய அரசு.. பின்னணி












Click it and Unblock the Notifications