சீனா, அமெரிக்கா கூட கண்டுபிடிக்காததை வெளி கொண்டு வந்த சந்திரயான் 3! இது புதுசா இருக்கே!
டெல்லி: இஸ்ரோ சார்பில் அனுப்பப்பட்ட சந்திரயான் விண்கலம் நிலவின் சிவ சக்தி எனும் இடத்தை ஆய்வு செய்து வருகிறது. இந்த ஆய்வில் பல புதிய விஷயங்கள் தெரிய வந்திருக்கின்றன.
இதனை சீனா, அமெரிக்கா கூட கண்டுபிடிக்கவில்லை என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். புதிய தவல்கள் மூலம் நிலவு பற்றி பல உண்மைகள் நமக்கு தெரிய வர வாய்ப்பு இருக்கிறது.

பிரக்யான் ரோவரில் உள்ள ஏபிஎக்ஸ்எஸ் எனும் கருவியை கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டபோது நிலவில் சோடியம், பொட்டாசியம் அளவு குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. மறுபுறம் சல்பர் அதிக அளவில் இருந்திருக்கிறது. இதற்கு முன்னர் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவை சேர்ந்த ரோவர்கள் கண்டுபிடித்த தகவல்களை இதனுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது, தகவல் வேறுபாடு தெரிகிறது. வழக்கமாக வெப்பம் அதிகமாக இருக்கும் இடத்தில் சல்பர் அளவும் அதிகமாக இருக்கும்.
ஆனால், இப்போது கண்டுபிடிக்கப்பட்ட சல்பர், வெயில் அதிகமாக வந்ததால் ஏற்பட்டது கிடையாது. மாறாக சுமார் 4.3 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நிலவு மீது ஆயிட்கென் எனும் பிரமாண்ட விண்கல் மோதியது. இதனால் நிலவின் மேற்பரப்பில் பெரிய பள்ளம் ஏற்பட்டது. மட்டுமல்லாது, நிலவின் உருவம் லேசாக வெளியில் தெரியவும் செய்தது. இது ஏற்படுத்திய வெப்பத்தால்தான் இங்கு சல்பர் அதிகரித்திருக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இது புதிய கண்டுபிடிப்பு. இப்படியான தகவலை இதற்கு முன்னர் வேறெந்த நாடுகளும் சொல்லவில்லை. காரணம் வழக்கமாக நிலவின் துருவ பகுதியில்தான் அனைத்து விண்கலன்களும் இறங்கி சோதனை மேற்கொண்டு வந்தன. ஆனால் சந்திரயான் 3 மிஷன் வழக்கமான இடத்தை டார்கெட் செய்யவில்லை. எனவேதான் பிரக்யான் ரோவரும் புதிய இடத்தில் ஆய்வு செய்து உண்மையை வெளி கொண்டு வந்திருக்கிறது.
இந்த கண்டுபிடிப்பு நிலவு எப்படி உருவானது என்பதை விளக்கும் 'Moon's Magma Ocean Hypothesis' எனும் கருத்துக்கு துணை போவதாக இருக்கிறது. அதாவது பூமியை போலவே நிலவும் முதலில் நெருப்பு கோளமாக இருந்து பின்னர் குளிர்ந்திருக்கலாம் என்று இந்த கருத்து கூறுகிறது. இதனை உறுதி செய்யும் வகையில் சந்திரயான் கண்டுபிடிப்பு அமைந்திருக்கிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications