சட்டத்துறையில் இருந்து மாற்றம்.."இது தண்டனை கிடையாது" மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ சொல்றதை கேளுங்க

Subscribe to Oneindia Tamil

டெல்லி: புவி அறிவியல்கள் துறை அமைச்சராக இன்று பொறுப்பேற்றுக்கொண்ட கிரண் ரிஜிஜூ, "இந்த துறை மாற்றம் தண்டனை கிடையாது. இது அரசின் திட்டமாகும். பிரதமர் மோடியின் தொலைநோக்கு திட்டமாகும்" என்று கூறினார்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் நேற்று திடீரென சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மத்திய சட்டத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த கிரண் ரிஜிஜூ அப்பொறுபில் இருந்து விடுவிக்கப்பட்டு புவி அறிவியல்கள் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். புதிய சட்டத்துறை அமைச்சராக அர்ஜூன்ராம் மேக்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Change from legal department, This is not a punishment - Union Minister Kiran Rijiju

சட்டம் மற்றும் நீதித்துறை என முக்கியமான துறையில் இருந்த கிரண் ரிஜிஜூவுக்கு முக்கியத்துவம் இல்லாத பொறுப்பு அளிக்கப்பட்டது. கிரண் ரிஜிஜூவை பொறுத்தவரை முதலில் விளையாட்டு மற்றும் சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சராக இருந்து வந்தார். சட்டத்துறை அமைச்சராக இருந்த ரவிசங்கர் பிரசாத் அப்பொறுப்பில் இருந்து விலகியதை அடுத்து சட்டத்துறை அமைச்சராக கிரண் ரிஜிஜூ நியமனம் செய்யப்பட்டார்.

வடகிழக்கு மாநிலமான அருணாசல பிரதேசத்தை சேர்ந்த கிரண் ரிஜிஜூ சட்டத்துறை அமைச்சராக பொறுப்பேற்றது முதலே, நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியம் முறைக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வந்தார். கொலீஜியம் முறை, அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்ற அளவுக்கு தனது விமர்சனங்களை முன்வைத்தார்.

கொலிஜியம் தேர்வு முறை புதிராக இருப்பதாகவும் இதில் வெளிப்படை தன்மையை ஏற்படுத்த வேண்டும், நீதிபதிகளை நியமனம் செய்யும் கொலிஜியம் அமைப்பில் மத்திய அரசின் பிரதிநிதிகளையும் சேர்க்க வேண்டும் என்று கிரண் ரிஜிஜூ கூறி வந்தார். இது தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டிற்கு அவர் கடிதமும் எழுதி இருந்தார்.

ஏற்கனவே இது தொடர்பாக தலைமை நீதிபதிக்கு எழுதப்பட்ட கடிதங்களின் நிலை குறித்து அறிந்து கொள்வதற்காக அனுப்பப்பட்ட கடிதம் இது எனவும் கிரண் ரிஜிஜூ கூறி வந்த நிலையில்தான் சட்டத்துறை பொறுப்பில் இருந்து முக்கியத்துவம் இல்லாத துறைக்கு மாற்றப்பட்டார். புவி அறிவியல்கள் துறை அமைச்சராக இன்று கிரண் ரிஜிஜூ பொறுப்பேற்றுக்கொண்டார்.

Change from legal department, This is not a punishment - Union Minister Kiran Rijiju

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கிரண் ரிஜிஜூ, "இந்த துறை மாற்றம் தண்டனை கிடையாது. இது அரசின் திட்டமாகும். பிரதமர் மோடியின் தொலைநோக்கு திட்டமாகும். யாராவது ஒருவர் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதில் எந்த தவறும் இல்லை. எனக்கு எதிராக பேசுவதுதான் எதிர்க்கட்சிகளின் வேலையாகும். எனவே அவர்கள் பேசட்டும்" என்றார். அப்போது அவரிடம் நீதித்துறையுடனான மோதல் குறித்து கேட்ட போது, "அரசியல் பேசுவதற்கான நாள் இது இல்லை" என்று பதிலளிக்க மறுத்து விட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+