சென்னை மெட்ரோ திட்டம் விரிவடைகிறது: ரூ.356.67 மில்லியன் டாலர் கடன் வழங்கும் ஆசிய உள்கட்டமைப்பு வங்கி
டெல்லி: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 356.67 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் வழங்க ஆசிய உள்கட்டமைப்பு வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த 2016ம் ஆண்டு முதல் "AIIB" ஆசிய உள்கட்டமைப்பு வங்கி பல்வேறு நிதி உதவிகளை வழங்கி வருகிறது.
இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட பணிக்காக 356.67 மில்லியன் அமெரிக்க டாலரை கடனாக வழங்க ஏஐஐபி ஒப்புதல் அளித்துள்ளது.

சென்னை மெட்ரோ உள்கட்டமைப்பு
இதுவரை இந்தியாவில் பல்வேறு திட்டங்களுக்கு 6.7 பில்லியன் அளவுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையின் போக்குவரத்து மற்றும் மெட்ரோவின் உயர்தர உள்கட்டமைப்பை மேம்படுத்த உதவும் என வங்கியின் துணை தலைவர் பாண்டியன் PTI செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின், பிடிஆர்
சமீபத்தில் சென்னை வந்த பாண்டியன், சென்னை மெட்ரோ ரயில் பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோரை சந்தித்தார்.

மெட்ரோ விரிவாக்கம்
சென்னையில் புறநகர் ரயில் - பேருந்து நிலையம் - விமான நிலையங்களை இணைக்கும் வகையிலும், கிழக்கே கலங்கரை விளக்கம் முதல் மேற்கே பூந்தமல்லி பைபாஸ் வரை மெட்ரோ விரிவாக்கம் செய்ய திட்டங்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் வாகன நெரிசல் , இயற்கை பாதிப்பு போன்றவற்றை தவிர்க்க முடியும் என பாண்டியன் கூறியுள்ளார்.

சென்னை மெட்ரோ
சென்னையில், மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தாலும்கூட புறநகர் ரயில் போல பல பகுதிகளையும் இணைக்கும் வகையில் இன்னும் முழுமையடையவில்லை. விரிவாக்கப் பணிகளுக்கு பிறகு, அந்த பணி நிறைவடையும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் உள்ளது. இதன் மூலமாக அதிகப்படியான மக்கள் சொந்த வாகனங்கள் மற்றும் பேருந்து சேவையை பயன்படுத்தாமல் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தினால், வாகன நெரிசல் மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடு தடுக்கப்படும். பயணம் விரைவாக அமையும் என்கிறார்கள் போக்குவரத்து வல்லுனர்கள்.












Click it and Unblock the Notifications