கண்கள் சிவந்த "பிசிசிஐ".. இந்திய அணியில் என்ன நடக்குது?.. கொதித்து போன ஜெ ஷா.. சிக்கிய சேத்தன்!
இந்திய அணியில் சில கிரிக்கெட் வீரர்கள் பிட்டாக இல்லை. அவர்கள் ஊசி போடுகிறார்கள் என்று இந்திய அணியின் தலைமை தேர்வாளர் சேத்தன் சர்மா தெரிவித்துள்ளார்.
டெல்லி: இந்திய அணியின் தலைமை தேர்வாளர் சேத்தன் சர்மாவிடம் நடத்தப்பட்ட ஸ்டிங் ஆப்ரேஷன் பிசிசிஐ அமைப்பை கடும் கோபத்திற்கு உள்ளாக்கி இருக்கிறதாம். பிசிசிஐ அமைப்பு இதனால் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்திய கிரிக்கெட் அணியின் பல்வேறு ரகசியங்களை ஜீ நியூஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு புலனாய்வு செய்தி மூலம் வெளியிட்டு உள்ளது. இந்திய அணியின் தலைமை தேர்வாளர் சேத்தன் சர்மாவிடம் நடத்தப்பட்ட ஸ்டிங் ஆபரேஷனில் இந்த அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்திய கிரிக்கெட் அணியில் இருக்கும் பல்வேறு பிரச்சனைகள், சீக்ரெட்கள், சர்ச்சைகள் பற்றி சேத்தன் சர்மா எப்படி புட்டு புட்டு வைத்ததுதான் இந்த சர்ச்சைகள் அனைத்திற்கும் முக்கியமான காரணமாக மாறி உள்ளது.
கோலியை யாருக்கும் பிடிக்காது.. ரகசிய கேமிராவில் சிக்கிய சேத்தன் சர்மா.. கேப்டன்சி சர்ச்சையின் உண்மை!

என்ன ஆபரேஷன்
இந்திய கிரிக்கெட் அணியின் பல்வேறு ரகசியங்களை ஜீ நியூஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு புலனாய்வு செய்தி மூலம் வெளியிட்டு உள்ளது. அதில், இந்திய அணியில் சில கிரிக்கெட் வீரர்கள் பிட்டாக இல்லை. அவர்கள் ஊசி போடுகிறார்கள். இவர்கள் வெறும் 80 சதவிகிதம் உடல் தகுதியோடு இருக்கும் போதே ஊசி போடுகிறார்கள். அவர்கள் வெறுமனே ஊசி போட்டுவிட்டு விளையாட தொடங்கி உள்ளனர். ஆனால் இந்திய வீரர்கள் பெயின் கில்லர்கள் எடுப்பது இல்லை. அவர்கள் பெயின் கில்லர் எடுத்து இருந்தால் அது ஊக்க மருந்து போல ஆகிவிடும்.

ஊக்க மருந்து
ஊக்க மருந்து கேட்டகரியில் வராத மருந்துகளை இந்திய வீரர்கள் கவனமாக எடுத்துள்ளனர். இந்திய அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா இடையே மோதல்கள் இல்லை. ஆனால் அவர்களுக்கு இடையில் ஈகோ இருக்கிறது. இரண்டு வீரர்களுமே பெரிய வீரர்கள். அதனால் இவர்களுக்கு ஈகோ உள்ளது. அவர்கள் இருவருமே பெரிய ஸ்டார்கள் போல. அமிதாப் பச்சன், தர்மேந்திரா இடையே ஈகோ இருந்தது போல இவர்கள் இடையே ஈகோ இருந்தது. கங்குலி ரோஹித் சர்மாவிற்கு ஆதரவாக எல்லாம் செயல்படவில்லை. ஆனால் அவர் கோலியை விரும்பவில்லை. கோலியை கங்குலி எப்போதுமே விரும்பியது இல்லை.

பிசிசிஐ
விராட் கோலி கேப்டன்சியில் இருந்து நீக்கியத்தில் கங்குலிக்கு பங்கு இருப்பதாக கோலி நினைக்கிறார். ஆனால் பிசிசிஐ கூட்டத்தில் 9 பேர் இருந்தனர். அப்போது கங்குலி.. கோலியை கேப்டன்சியில் இருந்து விலக வேண்டாம்.., ஒரு முறை யோசித்து பாருங்கள் என்று கூறி இருக்கலாம். ஆனால் அதை கோலி காதில் வாங்காமல் போய் இருக்கலாம். மொத்தம் 9 பேர் கூட்டத்தில் கலந்து கொண்டதால் கோலி அதை காதில் வாங்காமல் போய் இருக்கலாம். ஆனால் கோலியை கங்குலி எப்போதுமே விரும்பியது இல்லை. இன்னொரு பக்கம் வீரர்கள் ஊசி போடுவது பற்றி நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. பும்ரா முழு பிட்னஸில் இல்லை. அவரால் சரியாக வளைய முடியவில்லை. ஏனென்றால் அவருக்கு காயம் உள்ளது. சில வீரர்கள் ஊசி போட்டுவிட்டு மருந்து எடுத்துக்கொள்கிறார்கள், என்று சேத்தன் சர்மா இந்த ஸ்டிங் ஆபரேஷனில் தெரிவித்துள்ளார்.

பவர் இல்லையா?
இந்திய அணியின் தலைமை தேர்வாளர் சேத்தன் சர்மாவிடம் நடத்தப்பட்ட ஸ்டிங் ஆப்ரேஷன் பிசிசிஐ அமைப்பை கடும் கோபத்திற்கு உள்ளாக்கி இருக்கிறதாம். பிசிசிஐ அமைப்பு இதனால் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த ஸ்டிங் ஆபரேஷன் தொடர்பாக ரோஜர் பின்னி மற்றும் ஜெ ஷா இருவருக்கும் தகவல்கள் சென்றுள்ளன. இரண்டு பேருமே இந்த வீடியோக்களை பார்த்து சேத்தன் சர்மா மீது கடும் கோபத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் டி 20 உலகக் கோப்பை தோல்விக்கு பின் சேத்தன் சர்மா நீக்கப்பட்டார். இந்த நிலையில் மீண்டும் சேர்க்கப்பட்ட அவர் தற்போது மீண்டும் நீக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதே சமயம் அணியில் சேர்வதற்காக ஊசி போடும் வீரர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications