காங்கிரஸ் சறுக்கிய இடத்தில் ஸ்கோர் செய்த பாஜக.. சத்தீஷ்கரில் தோல்விக்கு இதுதான் காரணமா?
ராய்ப்பூர்: சத்தீஷ்கர் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து விடலாம் என்ற கனவில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் முடிவு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. சத்தீஷ்கரில் காங்கிரஸ் கோட்டை விட்டது எங்கே என்பது குறித்த தகவல்களை பார்க்கலாம்.
சத்தீஷ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலுங்கானா ஆகிய சட்டமன்ற தேர்தல்களில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், தெலுங்கானாவில் மட்டும் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. சத்தீஷ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சியை கைப்பற்றியது. சத்தீஷ்கரில் காங்கிரஸ் கட்சிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூறின.

ஆனால், தேர்தல் முடிவு காங்கிரஸ் கட்சிக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தது. சத்தீஷ்கரில் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியை பிடித்தது. காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவியதற்கு முக்கிய காரணமாக பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் அக்கட்சிக்கு ஆதரவு இல்லாதது என்பதே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. கடந்த 2021 ஆம் ஆண்டு சுக்மா மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதில் 4 பேர் கொல்லப்பட்டனர். 46 பேர் காயம் அடைந்தனர். காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணி பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சூடு ஆளும் அரசு மீது பழங்குடியின மக்கள் கோபம் ஏற்படுவதற்கு ஒருகாரணமாக அமைந்தது. அதேபோல், மலப்பகுதிகளில் கிடைக்க கூடிய பொருள்களின் விலை வீழ்ச்சி அடைந்ததும் பழங்குடியின மக்கள் கோபம் அடைவதற்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.
இதனால் பழங்குடியின மக்கள் ஆதிக்கம் நிறைந்த தொகுதிகளில் கடந்த முறை 15 இடங்களில் மட்டுமே பாஜக வென்றது. ஆனால் இந்த முறை இது அப்படியே 54 ஆக அதிகரித்தது. பாஜக சத்தீஷ்கரில் ஆட்சியை பிடிக்க பழங்குடியின மக்களின் வாக்குகள் பெரிதும் கை கொடுத்துள்ளது என்பது தெளிவாக தெரிகிறது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications