தலைமை தேர்தல் ஆணையர் நியமன வழக்கு.. உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா திடீர் விலகல்
டெல்லி: இந்திய தலைமை தேர்தல் ஆணையரை நியமனம் செய்யும் மூவர் குழுவில் இருந்து உச்சநீதிமன்ற நீதிபதியை நீக்கி அதற்கு பதில் பிரதமர் விரும்பும் மத்திய அமைச்சர் ஒருவரை சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையில் இருந்து விலகி கொள்வதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அறிவித்துள்ளார்.
நம் நாட்டில் ஒவ்வொரு மாநிலங்களின் சட்டசபை தேர்தல் மற்றும் லோக்சபா, ராஜ்யசபா தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் தான் நடத்தி வருகிறது. இந்த தேர்தலுக்கான தேதி, வாக்கு எண்ணிக்கை தேதியை அறிவித்து இந்திய தேர்தல் ஆணையத்தின் மேற்பார்வையில் தான் தேர்தல் என்பது நடத்தப்பட்டு வருகிறது.

இந்திய தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை ஒரு தலைமை தேர்தல் ஆணையர், 2 தேர்தல் ஆணையர்கள் இருப்பார்கள். அந்த வகையில் தற்போது தலைமை தேர்தல் ஆணையராக சஞ்சீவ் குமார் உள்ளார். தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ் குமார், சுக்வீர் சிங் சந்து ஆகியோர் உள்ளனர்.
பொதுவாக இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல்ஆணையர்கள் மத்திய அமைச்சரவையின் பரிந்துரை அடிப்படையில் ஜனாதிபதி நியமனம் செய்வார். இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. மத்தியில் ஆளும் கட்சி மூலம் ஜனாதிபதி வழியாக தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் செய்வதால் தேர்தல் ஆணையம் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் முன்வைத்தனர்.
இதையடுத்து இந்திய தேர்தல் ஆணையத்தின் தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் சீர்திருத்தம் கொண்டுவர உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்கை 5 நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரித்து கடந்த ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவில், மத்திய அரசு தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்வது தொடர்பாக ஒரு சட்டம் இயற்ற வேண்டும். அதுவரை, பிரதமர், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழு மூலம் தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்கள் நியமனம் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.
உச்சநீதிமன்றத்தில் இந்த உத்தரவால் மத்திய அரசு அதிருப்தி அடைந்தது. இதையடுத்து தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான முக்கிய சட்டத்திருத்தத்தை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில் தேர்தல் ஆணையர் நியமன குழுவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பதில் பிரதமர் பரிந்துரைக்கும் ஒரு மத்திய அமைச்சர் இடம்பெறும் அம்சம் உள்ளது. அதன்படி பிரதமர், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், ஒரு மத்திய அமைச்சர் ஆகியோர் இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்களை நியமிக்க இந்த மசோதா இடமளிக்கிறது.
இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் ஜெயா தாகூர் மற்றும் ஜனநாயக சீர்த்திருத்த சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. லோக்சபா தேர்தலுக்கு முன்பாக உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் செய்யப்பட்டன. இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வில் விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில் தான் இந்த வழக்கில் இருந்து உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா விலகுவதாக அறிவித்துள்ளார்.
பொதுவாக உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் ஒரு வழக்கு விசாரணைக்கு வரும்போது நீதிபதிகள் அதில் இருந்து விலகி கொள்ளும் வாய்ப்பு உள்ளது. அந்த அடிப்படையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா விலகி உள்ளார். இதனால் அந்த வழக்கு வேறு பெஞ்ச்க்கு மாற்றப்பட்டு 2025 ஜனவரி 6ம் தேதி முதல் விசாரணைக்கு வர உள்ளது.
-
என்னுடைய சகோதரருக்கே போன் போட்டு என் உத்தரவு பற்றி கேள்வி எழுப்புவதா? உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கோபம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம்












Click it and Unblock the Notifications