"பயோ ஆயுதம்!" பின்னணியில் அமெரிக்கா? சீன மையத்தில் இருந்து பரவிய கொரோனா! வூஹான் ஆய்வாளர் பகீர்
டெல்லி: கொரோனா பரவல் இப்போது தான் ஓரளவுக்கு முடிவுக்கு வந்துள்ள நிலையில், இப்போது அதன் தோற்றம் குறித்து சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நம்மை கொரோனா வைரஸ் வைத்துச் செய்துவிட்டது. உலக வல்லரசுகள் அமெரிக்கா தொடங்கி ஆப்பிரிக்கா வரை அனைத்து நாடுகளுமே கொரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
இப்போது தான் நாம் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறோம். உலகெங்கும் உள்ள ஆய்வாளர்கள் தீவிரமாக முயன்று வேக்சினை கண்டுபிடித்ததே கொரோனா பாதிப்பு எளிதாகக் கட்டுக்குள் வரக் காரணமாக அமைந்தது.

கொரோனா
கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தாலும் கூட இன்னுமே கொரோனா குறித்துப் பல மர்மங்கள் நீட்டித்து வருகிறது. அதிலும் குறிப்பாக கொரோனா பாதிப்பு எப்படி முதலில் பரவியது என்பதில் குழப்பம் தொடர்கிறது. சீன ஆய்வாளர்கள் வௌவாலில் இருந்தே கொரோனா பரவியதாகக் கூறுகின்றனர். அதாவது கொரோனாவால் பாதிக்கப்பட்ட வௌவாலில் புனுகு பூனை தின்றதாகவும்.. அதன் கறியை மனிதர்கள் உண்ணும் போது கொரோனா வைரஸ் மனிதர்களுக்குப் பரவியதாகவும் கூறப்பட்டது. சீனாவுக்குச் சென்று ஆய்வு செய்த மருத்துவ வல்லுநர்களும் கூட இதே கருத்தையே முன்வைத்தனர்.

சீன ஆய்வகம்
அதேநேரம் மற்றொரு புறம் வூஹானில் உள்ள வைராலஜி மையத்தில் மனிதர்களால் இந்த கொரோனா பரவியதாகவும் தகவல் வெளியானது. இதற்கான ஆதாரங்கள் என பல்வேறு தரவுகள் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக முதலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பலரும் இந்த வைரலாஜி மையத்தில் பணிபுரிந்து வந்தவர்கள் தான். பல நாடுகளில் கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வந்துவிட்ட இன்னுமே கூட இந்த மர்மத்திற்கு மட்டும் நமக்கு விடை கிடைக்கவில்லை. இதற்கிடையே வைரலாஜி மையத்தில் பணிபுரிந்த ஆய்வாளர் ஒருவர் இது தொடர்பாகப் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.

ஆண்ட்ரூ ஹஃப்
அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஆண்ட்ரூ ஹஃப். இவர் சீனாவின் வூஹான் வைராலஜி மையத்தில் கொஞ்சக் காலம் பணியாற்றியுள்ளார். இவர் தி ட்ரூத் அபவுட் வூஹான் என்ற புத்தகத்தில் கொரோனா தொடர்பாகவும் வூஹான் வைரஜி மையம் தொடர்பாகவும் பல முக்கிய தரவுகளைத் தெரிவித்துள்ளார். இவர் EcoHealth Alliance என்ற அமைப்பின் துணைத் தலைவராக இருந்துள்ளார். இந்த அமைப்பு தொற்று பாதிப்புகள் தொடர்பாக பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது. அவரது இந்த புதிய புத்தகத்தின் சில குறிப்பிட்ட பகுதிகள் பிரிட்டன் ஆங்கில ஊடகம் ன்றில் வெளியாகி உள்ளது.

பாதுகாப்பு இல்லை
அதில் அவர், "சீனாவின் வூஹான் மையம் போதிய பாதுகாப்பு இல்லாமல் செயல்பட்டது. அங்கு பயோ பாதுகாப்பு, உயிர் பாதுகாப்பு, எதாவது மோசமாக நடந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த போதுமான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இல்லை.. 10 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு வகையான கொரோனா வைரஸ்களை வைத்து இந்த வூஹான் ஆய்வு மையம் ஆய்வு செய்து வருகிறது. இந்த ஆய்வு மையத்தில் இருந்து வைரஸ் கசிந்திருக்கலாம். ஏனென்றால் அங்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை" என்று அதில் கூறியுள்ளார்.

அமெரிக்கா நிதி
இந்த வூஹான் மையத்திற்குப் பல காலம் தேசிய சுகாதார நிறுவனம் என்ற அமைப்பு தான் நிதியுதவி அளித்து வந்தது. இந்த தேசிய சுகாதார நிறுவனம் அமெரிக்க அரசின் கீழ் இயங்கும் அமைப்பாகும். கொரோனா வைரஸ் பரவுவதற்கு முன்பு வூஹான் மையத்திற்கு அமெரிக்கா தொடர்ச்சியாக நிதி அளித்து வந்துள்ளது. இருப்பினும், போதிய பாதுகாப்பு நடவடிக்கை கூட இல்லாத ஒரு ஆய்வு மையத்திற்கு அமெரிக்கா எப்படி நிதியளிக்கலாம் என்ற கேள்விகளும் அமெரிக்காவிலேயே எழுந்துள்ளது.

பயோ ஆயுதம்
ஆண்ட்ரூ ஹஃப் மேலும் கூறுகையில், "மற்ற உயிரினங்களை கொரோனா வைரஸ் எப்படித் தாக்கும் என்பது குறித்து வூஹான் மையத்தில் பல ஆண்டுகளாகவே தொடர்ச்சியாக ஆய்வுகள் நடத்தப்பட்டு வந்தது. இது மரபணு ரீதியாக மாற்றப்பட்ட ஒரு வைரஸ் என்பது கொரோனா பரவ தொடங்கிய முதல் நாளில் இருந்தே சீனாவுக்கு நன்கு தெரியும். இந்த வைரஸ் தான் வூஹான் ஆய்வகத்தில் இருந்து லீக்காகி உள்ளது. ஆபத்தான இந்த உயிரி தொழில்நுட்பம் குறித்து போதிய பாதுகாப்பு இல்லாமல் ஆய்வு செய்த சீனாவுக்கு நிதி கொடுத்ததே அமெரிக்கா செய்த தவறு தான். நாம் அவர்களுக்கு பயோ ஆயுதத்தைக் கொடுத்துப் போல ஆகிவிட்டது" என்று அதில் கூறியுள்ளார்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications