"அனலை கக்கும் சீனா".. இந்தியாவை சீண்ட "மாஸ்டர் பிளான்".. ரெடியாகும் "பாகுபலி" ஆயுதங்கள்
'மேசஸ்' ரக ஆயுதங்கள் என்பது அடிதடிக்கு பயன்படும் கொலை ஆயுதங்கள் ஆகும். அதாவது இரும்பு மற்றும் எஃகு ராடுகளில் பெரிய கூர்மையான ஆணிகளை போன்ற பற்கள் பொருத்தப்பட்டிருக்கும்.
டெல்லி: இந்திய எல்லைக்குள் இரண்டு முறை நுழைந்து மூக்குடைப்பட்டு ஓடிய சீனா, இந்த முறை அடிபட்ட புலியாக மீண்டும் இந்திய எல்லைக்குள் அதீத பலத்துடன் ஊடுருவும் திட்டத்தை வகுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவில் மூன்றாவது முறையாக அதிபர் ஜி ஜின்பிங் ஆட்சிப் பீடத்தை கைப்பற்றிய நிலையில், இதற்கான வேலைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக, அடிதடி மோதலுக்கு பயன்படும் பயங்கர கொலை ஆயுதங்களை சீனா வாங்கிக் குவித்து வருவதாக 'இந்தியா டுடே' வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அனல் கக்கும் 'டிராகன்'
ஆசிய பிராந்தியத்தில் தனக்கு நிகராக இந்தியா வளர்வதை ஓர் அச்சுறுத்தலாக சீனா பார்க்கிறது. மேலும், சர்வதேச அளவில் மிகப்பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுப்பது சீனாவுக்கு பிடிக்கவில்லை. இதனால் எப்படியாவது இந்தியா மீது போர் தொடுத்து அதன் பொருளாதாரத்தை சீர்குலைத்துவிட வேண்டும் என சீனா விரும்புவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன் ஒருபகுதியாகவே, இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தையும், லடாக்கையும் சமீபகாலமாக அந்நாடு சொந்தம் கொண்டாடி வருகிறது.

தெறிக்கவிட்ட இந்தியா
இதனிடையே, யாரும் எதிர்பாராதவிதமாக கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் லடாக்கை கைப்பற்றும் நோக்கத்தில் சீன ராணுவத்தினர் எல்லைக்குள் அதிரடியாக நுழைந்தனர். நுழைந்தது மட்டுமல்லாமல் லடாக்கின் பெரும்பாலான பகுதிகளில் டென்ட் அடித்து தங்கியும், சீன தேசியக் கொடியையும் அவர்கள் நட்டு வைத்தனர். இதனை அறிந்து வீறுகொண்ட வேங்கையாக அங்கு சென்ற இந்திய ராணுவ வீரர்கள், சீனப் படையினர் மீது பயங்கர தாக்குதலை நடத்தினர். சீனா என்பதால் இந்தியா பயந்து தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் என எண்ணிய சீனப் படையினர், இந்தியாவின் இந்த அதிரடியை எதிர்பார்க்கவில்லை.

சர்வதேச அவமானம்
அப்போதுதான், கல்வான் பள்ளதாக்கில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்தியா - சீனா எல்லையில் ராணுவ வீரர்கள் துப்பாக்கியை பயன்படுத்தக் கூடாது என்பதால், சீனப்படையினர் இரும்பு ராடுகள், இரும்பு முட்கள் சுற்றப்பட்ட எஃகு கம்பிகள், கிரிக்கெட் மட்டைகள் போன்ற ஆயுதங்களை கொண்டு தாக்கினர். ஆனால், இந்திய வீரர்களோ வெறும் கைகளை கொண்டே சீனப்படையினரை நிலைக்குலையச் செய்தனர். இந்த மோதலில் 40 சீன வீரர்கள் உயிரிழந்தனர். இந்தியா தரப்பில் 20 ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர். இந்நிலையில், இதற்கு பழிதீர்க்கும் விதமாக கடந்த டிசம்பர் மாதம் 300 சீன ராணுவ வீரர்கள், அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் செக்டார் பகுதிக்குள் நுழைந்தனர். அப்போது வெறும் 50 இந்தியப் படையினர் சீன ராணுவத்தினரை விரட்டியடித்தனர்.

பாகுபலி ஆயுதங்கள்
இந்தியாவிடம் இவ்வாறு தொடர்ந்து குட்டு வாங்கி ஓடியது சீனாவுக்கு சர்வதேச அளவில் பெரும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில்தான், சீனா அடுத்தக்கட்ட மோதலுக்கு தயாராகி வருவதாக 'இந்தியா டுடே' செய்தி வெளியிட்டுள்ளது. சீனாவில் 3-வது முறையாக ஜி ஜின்பிங் அதிபராக பொறுப்பேற்ற நிலையில் இந்த நடவடிக்கையில் சீன ராணுவம் முழுவீச்சில் இறங்கியுள்ளதாக தெரிகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக 'மேசஸ்' (maces) ரக ஆயுதங்களை சீன ராணுவம் வாங்கிக் குவித்து வருவதாக 'இந்தியா டுடே' தெரிவித்துள்ளது. இந்த ஆயுதங்களைதான் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தினர் பயன்படுத்தினர். தற்போது வாங்கப்பட்டுள்ள இந்த புதிய ஆயுதங்களை இந்திய எல்லைப் பிரச்சினைக்கு சீன ராணுவம் பயன்படுத்தும் என பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

'மேசஸ்' ரக ஆயுதங்கள்..
'மேசஸ்' ரக ஆயுதங்கள் என்பது அடிதடிக்கு பயன்படும் கொலை ஆயுதங்கள் ஆகும். அதாவது இரும்பு மற்றும் எஃகு ராடுகளில் பெரிய கூர்மையான ஆணிகளை போன்ற பற்கள் பொருத்தப்பட்டிருக்கும். மேலும், கைப்பிடி மிக நீளமாக இருக்கும். சில ஆயுதங்களில் கைப்பிடியில் சங்கிலி இணைக்கப்பட்டிருக்கும். இதனால் எதிரிகள் தூரத்தில் இருந்தால் கூட இந்த ஆயுதங்களை கொண்டு தாக்க முடியும். உதாரணமாக, பாகுபலி திரைப்படத்தில் பல்வாள் தேவன் கதாபாத்திரம் பயன்படுத்தும் ஆயுதங்களை போல இவை இருக்கும். மிக பயங்கரமான இந்தக் 'கொலை ஆயுதங்களை' சீன ராணுவம் வாங்கியதன் விவரங்களும் அநநாட்டு ராணுவ வெப்சைட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.
-
இனி பெட்ரோல் பங்க், சூப்பர் மார்கெட்களிலும் கூட மது கிடைக்கும்.. புதிய கலால் கொள்கை வெளியீடு -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ்












Click it and Unblock the Notifications